"ரூ. 1750 கோடி.." அதானி லஞ்ச வழக்கில் அமெரிக்கா சொன்ன அந்த 'வெளிநாட்டு அதிகாரி #1' யார்? பகீர் தகவல்
டெல்லி: சூரிய ஒளி திட்டம் தொடர்பாக மாநில மின்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறி அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்துள்ளது. அந்த குற்றப்பத்திரிக்கையில் ரூ. 1750 கோடி லஞ்சம் பெற்ற நபர் வெளிநாட்டு அதிகாரி #1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே யார் அந்த வெளிநாட்டு அதிகாரி #1 என்பது குறித்து தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கீழ் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அப்படி மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானது SECI எனப்படும் Solar Energy Corporation of India நிறுவனமாகும்.

2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனம் சூரிய ஒளி மின்சார திட்டங்களைச் செயல்படுத்தும். மேலும், மாநில அரசுகளுக்குத் தேவையான சூரிய ஒளி மின்சாரத்தை இது பெற்றுத் தரும்.
என்ன வழக்கு: இந்த SECI நிறுவனத்துடன் அதானி குழுமம் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகிறது. இந்த திட்டங்களுக்காக அமெரிக்காவில் இருந்து அதானி குழுமம் ரூ20,000 கோடிக்கு முதலீடுகளைப் பெற்றுள்ளன. அதேநேரம் SECI நிறுவனத்துடன் மாநில அரசுகள் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது என்பதே இப்போது எழுந்துள்ள புகாராகும்.
SECI நிறுவனத்துடன் ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் இதற்காக அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட Azure Power மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே புகார். இந்த வழக்கில் தான் நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு அதிகாரி: அதாவது லஞ்ச வழக்கில் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் வெளிநாட்டு அதிகாரி 1 (Foreign Official #1) என்று ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020- 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார திட்டங்களின் ஒப்பந்தங்களைப் பெற அதானி குழுமம் மொத்தம் ரூ. 2029 கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 265 மில்லியன்) லஞ்சம் கொடுத்ததாகவும் அதில் ரூ. 1750 கோடி இந்த வெளிநாட்டு அதிகாரி 1க்கு தரப்பட்டுள்ளதாக அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த வெளிநாட்டு அதிகாரி 1 யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
யார் அவர்: அந்த வெளிநாட்டு அதிகாரி #1 அவர் ஆந்திரப் பிரதேச அரசு அதிகாரி எனக் கூறப்பட்டுள்ளது. அவர் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றிய நபர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அவரது பெயர், போட்டோ உள்ளிட்ட மற்ற எந்தவொரு விவரங்களும் அதில் இடம்பெறவில்லை.
பின்னணி: கடந்த 2020ல் அதானி கிரீன் எனர்ஜியும் மற்றொரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமும் 12 ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றன. இருப்பினும், எந்தவொரு மாநில அரசும் இதை வாங்க முன்வரவில்லை. இதனால் தனது ஒப்பந்தம் ரத்தாகும் என்பதால் இதில் இருந்து மின்சாரத்தைப் பெற அதானி குழுமம், மாநில மின்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மின் துறை அதிகபட்சமாக 7 ஜிகாவாட் மின்சாரத்தை வாங்கிய நிலையில், அவருக்கு ரூ. 1750 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள அந்த வெளிநாட்டு அதிகாரி #1ஐ 2021ம் ஆண்டு கவுதம் அதானியே நேரில் பல முறை சந்தித்துப் பேசியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications