இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர் இவர்தான்.. ஊதியம் எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துதே
டெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிஇஒ சி விஜயகுமார் மொத்த சுமார் 10.06 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹ 84.16 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் சிஇஓக்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் என்ற பெருமையை இவர் பெற்று இருக்கிறார்.
சர்வதேச ஐடி துறையில் இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஐடி துறையில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருந்து வருகிறது. இதற்கிடையே நமது நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி சிஇஓ யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிஇஒ விஜயகுமார் மொத்தம் சுமார் 10.06 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹ 84.16 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார்.
சம்பளம் எவ்வளவு: ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை 2023-2024இன் படி, விஜயகுமாரின் ஊதியம் கடந்த ஓராண்டில் 190.75% உயர்ந்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது ஊதிய பேக்கேஜ்ஜை பொறுத்தவரை அவர் அடிப்படைச் சம்பளமாக சுமார் $1.96 மில்லியன் (ரூ. 16.39 கோடி), பெறுகிறார். இது தவிர பெர்ஃபாமன்ஸ் உடன் இணைக்கப்பட்ட போனஸ் தொகையாக அவர் $1.14 மில்லியன் (ரூ. 9.53 கோடி), பெறுகிறார். இது தவிர நீண்ட கால ஊக்கத்தொகையாக அவருக்கு சுமார் $2.36 மில்லியன் (ரூ. 19.74) கோடி) கிடைக்கிறது.
இது தவிர $4.56 மில்லியன் (ரூ. 38.15 கோடி) அதாவது பங்குகளாகக் கிடைக்கிறது. மீதமுள்ள $0.04 மில்லியன் பிற சலுகைகளாக அவருக்குக் கிடைக்கிறதாம். ஐடி துறையில் இருக்கும் சராசரி ஊழியரை விட விஜயகுமாரின் ஊதியம் 707.46 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஐடி ஊழியரின் சம்பளம் இந்தாண்டு சராசரியாக 7.07 சதவீதம் மட்டுமே அதிகரித்த நிலையில், இவரது சம்பளம் ஒரே ஆண்டில் 190% வரை அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்கள்: இவருக்கு அடுத்து இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக், சுமார் ரூ. 66 கோடி சம்பாதிக்கிறார். அதேபோல விப்ரோ நிறுவனத்தின் புதிய சிஇஓ ஸ்ரீனி பாலியா, சுமார் ₹ 50 கோடி சம்பளமாகப் பெறுகிறார். அதேபோல டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் ₹ 25 கோடி சம்பளமாகப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
அதிக வருவாய் வளர்ச்சி: ஹெச்.சி. எல் நிறுவனத்தின் பெர்ஃபாமன்ஸ் குறித்து விஜயகுமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், "நமது வருமான்ம 13.3 பில்லியன் டாலராக இருக்கிறது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 5.5% அதிகமாகும்.. வரிக்கு முந்தைய வருவாய் 18.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது" என்றார். நமது நாட்டில் உள்ள டையர் 1 ஐடி நிறுவனங்களில் அதிகபட்ச வளர்ச்சியை இந்தாண்டு அடைந்த நிறுவனமாக ஹெச்.சி.எல் இருக்கிறது.
ஹெச்.சி.எல் நிறுவனம் இப்போது கிளவுட், ஏஐ உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக ஹெச்.சி.எல் நிறுவனம் இப்போது ஏஐ துறையில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஊழியர்களுக்கு ஏஐ பிரிவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்: சர்வதேச ஐடி சந்தையில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2024 நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் தான் அதிகபட்ச வருவாயைக் கொண்டு இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் ₹ 2,40,893 கோடியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் ₹ 1,53,670 கோடியாக இருக்கும் நிலையில், ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் வருவாய் ₹ 1,09,913 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல விப்ரோ நிறுவனத்தின் வருவாய் ₹ 89,794 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications