அதிக ஆதரவு கொண்ட சிஎம்.. இந்தியா டுடே சர்வேயில் நம்பர் 1 ஸ்டாலின்.. முதல்வர்கள் வரிசையில் "முதல்வர்"
டெல்லி: மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா டுடே வெளியிட்ட மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வே வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட மாத இடைவெளியில் இந்தியா டுடே மூட் ஆப் தி மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி மூட் ஆப் தி நேஷன் சர்வே வெளியிடுவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிடும்.
இந்த நிலையில் இந்த முறை மாநில முதல்வர்களின் மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட முதல்வர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக ஆதரவு கொண்ட முதல்வர்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டது.

முதலிடம்
இதில் மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் 42% சதவிகித மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆன நிலையில் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார்.

ஒடிசா
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% சதவிகித மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35% சதவிகித மக்கள் ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 31% சதவிகித மக்கள் ஆதரவுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி 30% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 29% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஆறாம் இடத்தில் உள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 29% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஏழாம் இடத்தில் உள்ளார். அடுத்த வருடம் உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் இதில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் 22% சதவிகித மக்கள் ஆதரவுடன் எட்டாம் இடத்தில் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 22% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 19% சதவிகித மக்கள் ஆதரவுடன் பத்தாவது இடத்தில் உள்ளார் . சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாதல் 19% சதவிகித மக்கள் ஆதரவுடன் 11வது இடத்தில் உள்ளார் .
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications