Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர் தானா? மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் பரபர ஆலோசனை! இன்று ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாகும் என பல கருத்து கணிப்புகள் கூறின. அந்த கருத்து கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளது.

Who will be the next Chief Minister of Karnataka? Mallikarjun Kharge and Rahul Gandhi discussed in Delhi

கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வென்று காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அதேபோல் கிங்மேக்கராக மாறுவோம் எனக்கூறிய ஜேடிஎஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் வெறும் 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று டிகே சிவக்குமார் டெல்லி சென்றுள்ளார்.

இதற்கிடையே தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனையை தொடங்கி உள்ளனர். இதில் ராகுல் காந்தி, கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தேர்தல் பொறுப்பாளர் கேசி வேணுகோபால் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சோனியா காந்தி சிம்லாவில் உள்ளதால் அவர் பங்கேற்கவில்லை.

கர்நாடகா முதல்வர் பதவிக்கு டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அதுபற்றி தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர். டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரில் யாருக்கு முதல்வர் பதவி வழங்குவது, யாரை சமாதானப்படுத்துவது பற்றி தலைவர்கள் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வேளையில் கர்நாடகா எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது. மக்கள் யாரை முதல்வராக்க விரும்புகின்றனர். இதுதொடர்பாக வெளியான கருத்து கணிப்புகள் குறித்த முக்கிய விஷயங்களை அவர்கள் கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி பார்த்தால் டிகே சிவக்குமாரை விட சித்தராமையா தான் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சித்தராமையா அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அதுபற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கினால் டிகே சிவக்குமார் அதிருப்தி அடையலாம். இதனால் அவர்கள் 2 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் கட்சி மேலிடம் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது டிகே சிவக்குமாரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தி அவரது ஆதரவாளர்களுக்கு கூடுதலாக அமைச்சரவையில் இடம் வழங்க உத்தரவாதம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிகே சிவக்குமாரின் உழைப்பை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மறக்கவில்லை எனவும், வரும் காலத்தில் முதல்வர் பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவிக்க உள்ளதாக எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+