சக்ஸஸ்.. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே.. குஷியில் கதர்கள்
அகில இந்திய காங்கிரஸ் தலைமை தேர்தல் பதவிக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளன
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, மல்லிகார்ஜூன கார்கே 50%-க்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது வெற்றி பெறுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்ட் 10-ல் காங்கிரஸின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார்.. ஆனாலும் உடல்நலம் காரணமாக, ஒரு வருடத்துக்கு மட்டுமே அவர் பதவியில் நீடிப்பார், அதன்பிறகு தேர்தல் மூலம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றவாறு 3 வருடங்களாகவே தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை... இதனால் அதிருப்திகள் வெடித்தன.. பூசல்கள் பெருகின.. பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர்.. விலகும்போது, ராகுலை கடுமையாக குற்றஞ்சாட்டிவிட்டு போனார்கள்.

சோனியா காந்தி
விரைவில் எம்பி தேர்தலும் வர உள்ள நிலையில், காங்கிரஸ் இப்போதுதான் கண்விழித்து கொண்டுள்ளது.. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது... ஆனாலும், தேர்தலில் போட்டியிட சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி 3 பேருமே மறுத்துவிட்டனர். கட்சி தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கலில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்பி, சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

செம டென்ஷன்
அதன்படி, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் நேற்று முன்தினம் வாக்கினை செலுத்தினர். இது 96 சதவீத வாக்குப் பதிவு ஆகும்... தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாக்களித்தனர். 95 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இன்றே ரிசல்ட்
மாநில தலைமை அலுவலகங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று செல்லப்பட்டது.. இந்த வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் இன்று ஒன்றாக கலக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அனைத்து மாநிலங்களில் பதிவான வாக்குச் சீட்டுகளும் ஒன்றாக குவிக்கப்பட்டு, குலுக்கப்படும்.- இதன் மூலம் எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்பது தெரியவராது..

இன்ப அதிர்ச்சி
வாக்குச் சீட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்... முன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே சொல்லும்போது, இது உட்கட்சி தேர்தல்நட்புரீதியாக போட்டியிடுகிறோம். சசி தரூர் என்னை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துகூறினேன் என்றார்.. அதேபோல, சசிதரூர் சொல்லும்போது, காங்கிரஸின் தலையெழுத்தை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். கட்சியில் மாற்றம் தொடங்கி உள்ளது. தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார்..

ஆச்சரியம்
இப்படி இரு தரப்பினருமே மாறி மாறி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாலும், சோனியா, ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவு பெற்றுள்ள கார்கே வெற்றி பெறுவார் என்று கட்சி வட்டாரத்தில் நம்பப்பட்டு வருகிறது.. ஆனால், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று சசி தரூருக்கு ஆதரவு அளித்த கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.. அந்தவகையில் இன்றைய ரிசல்ட் எதிர்பார்ப்பை கூட்டி வந்த நிலையில் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், மல்லிகார்ஜூன கார்கே 50%-க்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை வகித்து வந்தார்..

நேரு
இறுதியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.. இதையடுத்து, டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் கார்கே ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து, 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications