Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிளீன் ஸ்வீப்.." லோக்சபா தேர்தலில் வெற்றி யாருக்கு தெரியுமா.. அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பியுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

 Who will win in 2024 Lok Sabha election answers Strategist Prashant Kishor

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கே கடந்த வாரம் வரை ஜேடியு- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால், திடீரென கடந்த வாரம் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி இந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநரைச் சந்தித்து நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி அன்றைய தினம் மாலையே அவர் பாஜக ஆதரவுடன் மீண்டும் 9ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

பிரசாந்த் கிஷோர்: இது பீகார் அரசியலைத் தாண்டி தேசியளவில் பேசுபொருள் ஆனது. ஏனென்றால் இந்தியா கூட்டணியை உருவாக்கியவர் முக்கிய தலைவர்களில் ஒருவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியில் இருந்து விலகியுள்ளது எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வரும் லோக்சபா தேர்தலில் வெல்ல யாருக்கு வாய்ப்பு உள்ளது.. எந்த கூட்டணிக்கு தேசியளவில் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கிளீன் ஸ்வீப்: இது குறித்து பிரபல இந்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி "கிளீன் ஸ்வீப்" செய்யும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணியை முறித்த நிதிஷ்குமாரைக் கடுமையாகச் சாடிய அவர், இதுதான் நிதிஷின் கடைசி இன்னிங்ஸ் என்றும் விமர்சித்தார்.

நிதிஷ் குமாரை சந்தர்பவாதி என்று விமர்சித்த பிரசாந்த் கிஷோர், 2025 பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜேடியு கட்சியால் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "எந்தக் கூட்டணியில் போட்டியிட்டாலும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமாரால் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது. அவர்கள் 20 இடங்களுக்கு மேல் பெற்றால், நான் என் பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இப்போது சொல்கிறேன் அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல் வரை கூட இந்த கூட்டணி (ஜேடியு- பாஜக) தாங்காது.

பாஜகவின் தந்திரம்: மக்கள் அவரை நிராகரித்துள்ளனர். அதனால் தான் முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இப்படியெல்லாம் செய்து வருகிறார். பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி என்பது எதிர்க்கட்சிகளின் "இந்தியா" அணியை அழிக்கும் பாஜகவின் தந்திரம் தான்.. அதேநேரம் பாஜக தனித்துப் போட்டியிட்டால் தான் அவர்களுக்குப் பலன் கிடைக்கும்.

பீகாரில் நிதிஷ்குமார் மட்டுமின்றி, பாஜக உட்பட, அனைத்து கட்சிகளும் கூட்டணியை மாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள். பீகாரில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பாஜகவுக்குப் பாதகமாகவும் அமையலாம். ஏனென்றால், பீகாரில் தனித்து போட்டியிட்டிருந்தால் நிதிஷ் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு வந்திருக்கும். ஆனால், இப்போது அந்த வாக்குகள் எங்குச் செல்லும் என்பதை நாம் பொறுத்தே தான் பார்க்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+