டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓர் இரவு.. மொத்தமாக திரண்ட பல லட்சம் மாணவர்கள்.. பல மாநிலங்களில் நடந்த போராட்டம்.. என்ன நடந்தது?

நேற்று இரவு முழுக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மிக கடுமையாக போராட்டம் நடத்தினார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest

    டெல்லி: நேற்று இரவு முழுக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மிக கடுமையாக போராட்டம் நடத்தினார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த போராட்டம் நடந்தது.

    பெரும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமானது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது.

    சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அசாம் மாநிலத்தில்தான் இந்த போராட்டம் முதலில் துவங்கியது. அங்குதான் தற்போது போராட்டம் விஸ்வருபம் எடுத்து வருகிறது. தற்போது நாடு முழுக்க போராட்டம் பரவி உள்ளது.

     போராட்டம் எதிரொலி.. தலைநகரிலேயே துண்டிக்கப்பட்ட இணையம்.. அலிகார் பல்கலை.க்கு திடீர் விடுமுறை! போராட்டம் எதிரொலி.. தலைநகரிலேயே துண்டிக்கப்பட்ட இணையம்.. அலிகார் பல்கலை.க்கு திடீர் விடுமுறை!

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    இந்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் போராட்டம் உச்சம் அடைந்தது. பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பல பேருந்து நிலையங்களில் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. மலடா, முரிஷாபாத், ஹவ்ரா, வடக்கு 24 பர்கானாஸ் , தெற்கு 24 பர்கான்ஸ் பகுதிகளில் அதிக அளவில் கலவரம் நடந்து வருகிறது. இதனால் அங்கு மொத்தமாக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மமதா பானர்ஜி அங்கு அவசர அவசரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அசாம் எப்படி

    அசாம் எப்படி

    அசாமில் இதனால் சில நிமிடம் நிறுத்தப்பட்ட போராட்டம் மீண்டும் வேகம் எடுத்தது. அதேபோல் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் போராட்டம் அதிகமாக நடந்து வருகிறது. திரிபுரா, மேகாலயாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். மேகாலயா பாஜக இது தொடர்பாக டெல்லி தலைமையிடம் புகார் அளித்துள்ளது. மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசலப்பிரதேசம் மாநிலங்களில் நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமாகி வருகிறது.

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

    நேற்று டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக போராட்டம் செய்தனர். டெல்லி முழுக்க இவர்கள் கண்டன பேரணி நடத்தினார்கள். பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

    ஹைதராபாத் போராட்டம்

    ஹைதராபாத் போராட்டம்

    அதேபோல் தென்னிந்தியாவிலும் இந்த போராட்டம் தீயாக பரவியது. ஹைதராபாத்தில் மவுலா அசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக போராட்டம் செய்தனர். இரவோடு இரவாக சாலைக்கு வந்து போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

    ஐஐடி போராட்டம்

    ஐஐடி போராட்டம்

    அதேபோல் நாடு முழுக்க இருக்கும் பல்வேறு ஐஐடிகளை சேர்ந்த மாணவர்களும் கடுமையாக போராட்டம் நடத்தினார்கள். மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, டெல்லி ஐஐடி, பெங்களூர் ஐஐஎஸ்டி ஆகிய கல்வி நிறுவன மாணவர்கள் இரவே போராட்டம் செய்து டெல்லி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கேரளா மாணவர்கள்

    கேரளா மாணவர்கள்

    இன்னொரு பக்கம் கேரளாவில் பல்வேறு மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் அம்மாநில ஆளுநர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார்கள். இவர்கள் அமைதி பேரணி சென்றதால் போலீசார் அவர்களை தடுக்கவில்லை.

    பீகார் நிலை என்ன

    பீகார் நிலை என்ன

    இந்தியாவில் மும்பை, லக்னோ, பீகார் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. பீகாரில் மாணவர்கள் பலர் போராட்டம் நடத்தி வந்தனர். ஒடிசாவில் சில இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. குஜராத்திலும் மாணவ அமைப்புகள் போராடி வருகிறார்கள்.வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த போராட்டம் இன்னும் பரவவில்லை.

    மதம் இல்லை

    மதம் இல்லை

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் மாணவர்கள் எந்த விதமான மதம், இனம், மொழி பாகுபாடு இன்றி போராட்டம் செய்து வருகிறார்கள். இந்துக்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழர்கள் பலர் டெல்லி போராட்டத்தில் கோஷம் எழுப்பினார்கள். பல இடங்களில் பெண்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

    English summary
    Whole India did see a massive Protest against Citizenship Amendment yesterday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X