பாஜக போடும் ஸ்கெட்ச்.. அடிக்கடி கூட்டணி மாறும் நிதிஷ்குமாருக்கு ஓகே சொல்ல என்ன காரணம்! பிண்ணனி
டெல்லி: நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். தொடர்ந்து கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும் நிதிஷ்குமாருக்கு பாஜக ஏன் ஓகே சொன்னது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஜேடியு தலைவர் நிதிஷ் குமாருக்கு பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக ஓராண்டுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகக் கூறியிருந்தார். ஆனால், இப்போது அங்கு அரசியல் முழுமையாக மாறிவிட்டது.

பீகார் முதல்வராக 8 முறை பதவியேற்ற நிதிஷ்குமார், இப்போது 9ஆவது முறையாக பாஜக ஆதரவுடன் பதவியேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் கூட்டணி மாறுவது இது 5ஆவது முறையாகும்.
க்ளைமாக்ஸ்: பீகாரில் கடந்த சில நாட்களாக நடந்த அரசியல் மாற்றங்கள் இன்று முடிவுக்கு வந்தது. பீகாரில் உள்ள பாஜக எம்எல்ஏக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்த நிலையில், நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ் குமாருடன் மேலும் 8 பேருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் வைத்தார். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
இருப்பினும், இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி நிதிஷ்குமாருடன் கூட்டணி வைக்க பாஜக எப்படி ஒகே சொன்னது என்பது தான். இத்தனை முறை கூட்டணி மாறும் நிதிஷ்குமாருக்கு மீண்டும் ஓகே சொல்ல என்ன காணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
காரணம் 1: முதலில் நிதிஷ்குமார் வருகை என்பது "இந்தியா" கூட்டணியைப் பலவீனப்படுத்தும். எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய முகமாக நிதிஷ்குமார் பார்க்கப்பட்டார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிதிஷ்குமார் இந்த நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியே வருவது "இந்தியா" கூட்டணியைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். மேலும், அவர்கள் இமேஜையும் அது கடுமையாகப் பாதிக்கும்,.
மறுபுறம் பாஜகவை பொறுத்தவரைப் பீகாரில் இதுவரை "இந்தியா" கூட்டணி வலுவாகவே இருந்தது. அங்கு 40 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், மீண்டும் நிதிஷ்- பாஜக கூட்டணி என்பது எதிர்க்கட்சிகளுக்குச் சவால் மிகுந்த ஒன்றாக மாறும். எனவே, நிதிஷ்குமார் வருகை என்பது இந்தியா கூட்டணிக்குச் சிக்கலைத் தரும் அதே நேரத்தில், பாஜகவுக்கு பலத்தை அதிகரிக்கிறது.
காரணம் 2: அடுத்து பீகார் மாநிலச் சட்டசபை.. என்ன தான் கடந்த கடந்த 10 ஆண்டுகளாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராக இருந்தாலும் அவரது கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. கடந்த 2010இல் நிதிஷ் கட்சி 115 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், அது 2015இல் 71ஆகவும் 2020இல் 43ஆகவும் குறைந்தது. இது நிதிஷ் கட்சிக்கு குறையும் செல்வாக்கைக் காட்டுகிறது. மறுபுறம் பாஜக ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே, முதல்வராக நிதிஷ்குமார் நீட்டித்தாலும் கண்டிரோல் என்பது பாஜக வசம் தான் இருக்கும்.
காரணம் 3: கடந்த காலங்களில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி கவிழ்ப்பை நடத்தியுள்ளது. ஆனால், இங்கே பீகாரில் நடந்தது வேறு.. இங்கே நிதிஷ்குமார் தான் தொடர்ந்து கூட்டணியை மாற்றி வருகிறார். இது நிதிஷ்குமார் இமேஜை டேமேஜ் செய்யுமே தவிர பாஜக இமேஜை டேமேஜ் செய்யாது.. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த இமேஜ் முக்கியமானதாகும்.
இதை எல்லாம் கணக்கிட்டே பாஜக மீண்டும் நிதிஷ்குமாருக்கு ஓகே சொல்லி இருக்கும். மீண்டும் நிதிஷ்குமார் கூட்டணிக்குள் வருவதால் பாஜகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. மாறாகப் பல நன்மைகள் தான் கிடைக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications