மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்!

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Why Central Government getting RS. 1.76 Lakh Cr from RBI?

    டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

    மத்திய அரசு கடந்த ஒரு வருடமாக ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டுக்கொண்டு இருந்தது. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டது. ஆனால் ஆர்பிஐ இதை தொடர்ந்து மறுத்தது.

    ஆர்பிஐ அமைப்பிடம் உள்ள உபரி நிதி என்பது மிக மிக அவசரமான சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும். அதிலும் அரசு கஜானா காலியாகும் மிக மோசமான சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

    அப்போதே

    அப்போதே

    ஆனால் இதை முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இருந்த போதே மத்திய அரசு கேட்டது. முதலில் ஆர்பிஐ கவர்னராக இருந்தார் ரகுராம் ராஜன் கண்டிப்பாக அந்த பணத்தை கொடுக்க முடியாது என்று கூறினார். அதேபோல் முன்னாள் கவர்னர் உர்ஜித் பட்டேலும் பணம் கொடுக்க முடியாது என்று கூறி மறுத்தார். இதனால் இரண்டு பேரும் கடும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.

    இரவு

    இரவு

    இந்த நிலையில்தான் நேற்று இரவு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார். ஒரு வருடமாக ஆர்பிஐ எதிர்த்து வந்ததை தற்போது ஏற்றுக்கொண்டு அரசுக்கு பணம் அளிக்க முடிவு செய்துள்ளது.

    ஏன்

    ஏன்

    ஆனால் மத்திய அரசு ஏன் இப்படி ஆர்பிஐ அமைப்பிடம் இருந்து உபரி நிதி கேட்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசின் கஜானா காலியாகிவிட்டதா? மிக மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு இப்படி செய்துள்ளதா, திட்டங்களை நிறைவேற்ற பணம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முக்கியம்

    முக்கியம்

    அதே சமயம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்தும் இந்த நிதி பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த 2018 - 19ம் ஆண்டில் அரசின் வருவாய் ₹17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் ₹15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது.

    என்ன மாயம்

    என்ன மாயம்

    இதனால் 1.7 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என்று அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. பட்ஜெட்டில் மாயமான இந்த பணம் எங்கே என்று இப்போதும் யாருக்கும் தெரியவில்லை. இந்த மாயமான பணத்தை ஈடுகட்டத்தான் ஆர்பிஐயிடம் சரியாக அதே அளவு பணத்தை அரசு கேட்டுள்ளதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+