"காங்கிரஸ் டூ பாஜக.." திடீரென தாவிய விஜயதரணி.. உண்மையில் என்ன காரணம்! உடைத்து பேசிய எல். முருகன்
டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி இன்றைய தினம் பாஜகவில் இணைந்த நிலையில், அவர் எதற்காக பாஜகவில் இணைந்தார் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஒரு பக்கம் பாஜகவை மாநிலம் முழுக்க கொண்டு சேர்க்க மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை சென்றுள்ளார்.

மறுபுறம் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களை பாஜகவுக்குக் கொண்டு வரவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் கூட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானார்கள்.
விஜயதரணி: இதற்கிடையே தமிழ்நாட்டில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயதரணி பாஜகவில் இணையலாம் என்று கடந்த சில காலமாகவே தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் அவர் பாஜகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவர் கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இணைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயதரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர்.. காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தற்போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதற்கிடையே விஜயதரணி எதற்காக பாஜகவில் இணைந்தார் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "இன்று பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணியை நான் மனதார வரவேற்கிறேன். அவர் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியைச் சேர்ந்தவர். அவர் விளவங்கோடு தொகுதியில் இருந்து 3 முறை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். நமது தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்யப் பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுக்க உள்ள மக்கள் பார்க்கிறார்கள்.
இதன் காரணமாகவே பல்வேறு தலைவர்களும் இப்போது பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரைக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
மாற்றுக் கட்சியினர்: கடந்த வாரம் தான் முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 17 பேர் பாஜகவில் இணைந்தார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களும் எங்கள் கட்சியில் இணைந்து பாஜகவை வலுப்படுத்துகிறார்கள். எனவே, அவர்களை நான் மனதார வரவேற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27ஆம் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அப்போது மோடி முன்னிலையில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணையலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அதற்கு முன்னதாக இன்றைய தினமே விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியின் நலத்திட்டங்களைக் கண்டே விஜயதரணி பாஜகவில் இணைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications