Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எல்லாமே பொய்.." ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த விரிவான பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானாவில் தேர்தல் திருடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அங்கு ஒரே நபரின் பெயரில் பல வாக்குகள் இருப்பதாகவும் அங்கு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஹரியானா வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது காங்கிரஸ் எந்தவொரு ஆட்சேபணையும் சொல்லவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

காங்கிரஸின் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்கள் முன்வைத்து வருகிறார். முதலில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்ததாகக் கூறியிருந்த ராகுல் காந்தி, இப்போது ஹரியானாவிலும் வாக்கு திருட்டு நடந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே காங்கிரஸ் அங்குத் தோல்வி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Rahul Gandhi Congress Haryana

ராகுல் குற்றச்சாட்டு

2024 ஹரியானா தேர்தல்கள் ஆளும் கட்சிக்குச் சாதகமாக மோசடி நடந்தாக அவர் தெரிவித்தார். அங்குக் காங்கிரஸ் வெறும் 25,000 வாக்குகளாலேயே தோல்வி அடைந்ததாகத் தெரிவித்த அவர், அங்குச் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். 5.21 லட்சம் போலி வாக்காளர்கள், 93,174 செல்லாத வாக்காளர்கள் மற்றும் 19.26 லட்சம் பல்க் வாக்காளர்கள் மூலம் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம்

இதற்கிடையே ஹரியானாவில் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்குச் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார். வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகள், உயிரிழந்தோர் உள்ளிட்டோரை நீக்கவே "சார்" பணிகள் நடைபெறுவதாகவும் அதை மட்டும் ராகுல் காந்தி எதிர்க்க என்ன காரணம் என தேர்தல் ஆணைய அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேல்முறையீடு செய்யவில்லை

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், ஹரியானா வாக்காளர் பட்டியல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் மேல்முறையீடு செய்யவில்லை என்றார். ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எதிராக இப்போது 22 மனுக்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் பங்கு இது தொடர்பாக ஏன் எந்தவொரு புகாரையும் எழுப்பவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு வாக்காளர் ஏற்கனவே வாக்களித்திருந்தால் அல்லது அந்த நபரின் அடையாளம் குறித்து சந்தேகம் இருந்தால் ஆட்சேபணைகளை எழுப்புவது பூத் ஏஜெண்டுகளின் பொறுப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகள்

வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது கூட ஒரே நபரின் பெயர் திரும்பத் திரும்ப வந்திருந்தால்.. அதைத் தடுக்கக் காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகள் எந்தவொரு கோரிக்கை அல்லது ஆட்சேபணையையும் எழுப்பவில்லை என்றும் இது தொடர்பாக எந்த மேல்முறையீடுகளையும் செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ஒருவேளை இரட்டைப் பதிவுகள் இருந்திருந்தாலும் கூட அந்த வாக்காளர்கள் நிச்சயம் பாஜகவுக்குத் தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் காந்தி எப்படி உறுதியாகக் கூற முடியும் என்றும், இந்த வாக்காளர்கள் காங்கிரசுக்கு கூட வாக்களித்திருக்கலாம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+