டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு டேட்டா மிஸ்ஸிங்.. கோவாக்சினுக்கு இன்னும் கிடைத்த அவசர அனுமதி.. ஹூ சொன்ன காரணம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் இன்னும் அவசர அனுமதி அளிக்கவில்லை. இதற்கான காரணத்தை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள வேக்சின்களை ஆராய்ந்து அதற்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்து வருகிறது. இந்த அனுமதியை பொறுத்தே உலக நாடுகள் ஒரு நாட்டின் வேக்சினை அனுமதிக்கும்.

இந்த அவசர அனுமதி பெற்றால் மட்டுமே வீசா பெறுவது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது போன்ற நடைமுறைகளை செயல்படுத்த முடியும். தற்போது இருக்கும் கோவாக்சின் இந்தியாவில் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் மூலம் அனுமதிக்கப்பட்டுவிட்டது.

40% தொகுதிகளை.. உ.பி. தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு.. பிரியங்கா காந்தி அதிரடி40% தொகுதிகளை.. உ.பி. தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு.. பிரியங்கா காந்தி அதிரடி

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

ஆனால் உலக சுகாதார மையம் இன்னும் கோவாக்சினுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்தியாவில் ஒருவர் கோவாக்சின் போட்டுக்கொண்டாலும் உலக நாடுகளை பொறுத்தவரை அவர் வேக்சின் போடாத நபர்தான். கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோவாக்சினுக்கு அவசர அனுமதி பெற பாரத் பயோடெக் நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் உலகம் சுகாதார மையம் இதை வழங்கவில்லை.

கோவாக்சின்

கோவாக்சின்

போதிய தரவுகள் வழங்கப்படவில்லை என்ற காரணத்தால் இந்த வேக்சினுக்கு அனுமதி வழங்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்தது. இதையடுத்து உலக சுகாதார மையத்திடம் கடந்த மாதம் 27ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் தரவுகள் அனைத்தையும் வழங்கியது. இதையடுத்து இந்த வாரம் கோவாக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் நினைத்தது. ஆனால் உலக சுகாதார மையம் இந்த அனுமதியை வழங்கவில்லை.

பாரத் பயோடெக்

பாரத் பயோடெக்

இந்த நிலையில்தான் இது தொடர்பாக உலக சுகாதார மையம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் இதில் குறுக்கு வழியில் சென்று அனுமதி கொடுக்க முடியாது. அவசர அனுமதி தரும் முன் முறையாக தரவுகளை ஆராய வேண்டும்.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
     அவசர அனுமதி

    அவசர அனுமதி

    நாங்கள் கூடுதலாக ஒரு தரவிற்காக காத்து இருக்கிறோம். அந்த ஒரு தரவு இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த தரவு கிடைத்த பின் அதை ஆய்வு செய்து அவசர அனுமதி குறித்த முடிவை எடுப்போம். வேக்சினுக்கான அவசர அனுமதி என்பது அதன் திறன், பாதுகாப்பு, தரம், ஒவ்வொரு நாட்டு இனக்குழு மக்களிடம் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து வழங்கப்படும்.

    தரவு

    தரவு

    இந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் ஒரு வேக்சின் நிறுவனம் தரவுகளை வழங்க வேண்டும். அதை வைத்தே அவசர அனுமதி வழங்குவோம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இன்று பாரத் பயோடெக் நிறுவனம் வேக்சின் தரவுகளை அளிக்கும்பட்சத்தில் இந்த மாதம் 26ம் தேதி நடக்க உள்ள ரிவ்யூ மீட்டிங்கில் கோவக்சினுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.

    English summary
    Why Covaxin did not get WHO emergency approval yet even submitting all data?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X