"என்னை ஓட வைக்காதீர்கள்.." தல தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ரசிகர்கள் ஷாக்! என்ன மேட்டர் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று போட்டி முடிந்த பிறகு தல தோனி சொன்ன சில கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் . ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க மக்களும் ஆர்வமாக இருக்கவே செய்கிறார்கள்.

இந்தாண்டு கிட்டதட்ட அனைத்து அணிகளும் 11 லீக் சுற்றுகளில் விளையாடிவிட்டன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அனைத்து அணிகளும் மிகவும் நெருக்கமாகவே இருக்கிறது.

Why Dhoni asked his teammate to Dont Make him Run in Delhi match

ஐபிஎல்: கடந்தாண்டு சென்னைக்கு மிக மோசமாக அமைந்த நிலையில், இந்தாண்டு அவர்கள் தொடக்கம் முதலே சிறப்பாகவே விளையாடி வருகின்றனர். நேற்றைய தினம் கூட டெல்லிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தைச் சென்னை வெளிப்படுத்தியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 167 ரன்களை எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி அதில் 7இல் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கிறது.

நேற்று டெல்லி அணி உடனான போட்டியில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் வின்டேஜ் தோனியை கண்டனர். இதில் 9 பந்துகளில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார் தோனி. இதில் சிஎஸ்கே பெற்ற வெற்றியின் மூலம் அடுத்து பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பு மிகச் சிறப்பாகவே மாறியுள்ளது. தல தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ஓட வைக்காதீர்கள்: குறைவான பந்துகளில் பவுண்டரி, சிக்ஸ்களை அடித்து நொறுக்கியது குறித்துப் போட்டு முடிந்த பிறகு பேசிய தல தோனி, "இதுதான் என் வேலை. இதைத்தான் நான் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். என்னை அதிகம் ஓட வைக்காதீர்கள் என்றேன். அது வேலை செய்கிறது. நான் இப்படி தான் விளையாட வேண்டும் என பிளான் செய்திருந்தேன். அது ஓர்க் அவுட் ஆகிறது.

Why Dhoni asked his teammate to Dont Make him Run in Delhi match

போட்டியின் கடைசிக் கட்டத்தை நெருங்க நெருங்க, அனைவருக்கும் பேட்டிங் பிடிக்க சில பந்துகள் மட்டுமே கிடைக்கும்.. நாம் அதில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். மிட்ச் சான்ட்னர் அணிக்கு முக்கியம் அவர். புதிய பந்திலும் பிளாட் விக்கெட்டுகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதேபோல நல்ல பேட்டிங் திறனையும் கொண்டவர். அவர்

கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் பேட்டிங் செட் ஆகிவிட்டால் போதும், அப்படியே மெல்ல எவ்வித சிரமமும் இல்லாமல் ரன்களை குவிப்பார். அவர் சிங்கிள் எடுத்து ஸ்டைக் ரோட்டேட் செய்யவும் என்றும் தயங்கியது இல்லை. கேம் எப்படி இருக்கிறது. நாம் எப்படி விளையாட வேண்டும் என்ற பிளான் அவரிடம் இருக்கிறது. அப்படியொரு நபர் கிடைப்பது அரிது. அதுபோன்ற நபர் தான் நமக்குத் தேவை" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+