டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி டக்கென கேட்ட கேள்வி.. எதிர்பாராமல் திகைத்த அன்புமணி.. அப்போ கன்பார்மா? 20 நிமிஷம் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று பிரதமர் மோடியை பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 20 நிமிடம் பேசிக்கொண்டது என்ன என்ற கேள்வியை இந்த சந்திப்பு எழுப்பி உள்ளது.

கடந்த மே 28ம் தேதி பாமக சிறப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். ஜிகே மணி தலைவராக இருந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அந்த இடத்தை பிடித்தார்.

நான் அப்படி என்ன கேட்டுட்டேன்? லெட்டரை தப்பாக அனுப்பிய சு.சாமி? விட்டு விளாசும் திமுக புள்ளி! பரபர! நான் அப்படி என்ன கேட்டுட்டேன்? லெட்டரை தப்பாக அனுப்பிய சு.சாமி? விட்டு விளாசும் திமுக புள்ளி! பரபர!

இதையடுத்து தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களை, அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

சந்திப்பு

சந்திப்பு

இதன் ஒரு கட்டமாக பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார். நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் இவர்கள் இடையிலான சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு குறித்த பல்வேறு கோரிக்கைகளை, பிரச்சனைகளை அன்புமணி முன்வைத்ததாக நாம் நேற்றே செய்தி வெளியிட்டு இருந்தோம்.நீட் விலக்கு, காவிரி பிரச்சனை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாக குறிப்பிட்டு இருந்தோம்.

20 நிமிடம் ஏன்?

20 நிமிடம் ஏன்?

ஆனால் இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது ஏன் என்று கேள்விதான் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதமாக எழுந்துள்ளது. பொதுவாக மாநில முதல்வர்களை பிரதமர் மோடி சந்தித்தால் 20-30 நிமிடம் பேசுவார். மற்றபடி கட்சி தலைவர்களை பெரிதாக சந்திக்க மாட்டார். அப்படியே சந்தித்தாலும் அதிகபட்சம் 10 நிமிடம் அவர் பேசுவதே வழக்கம். ஆனால் நேற்று சந்திப்பில் இவர்கள் இருவரும் 20 நிமிடம் பேசிக்கொண்டது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பாஜக

அதிமுக பாஜக

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான உறவில் நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டு வருகிறது. எங்கள் கூட்டணியில் பிரச்சனை இல்லை என்று அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் கூறி வந்தாலும், கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா என்ற சந்தேகம் நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக 25 இடங்களை கைப்பற்ற நினைக்கிறது என்று அண்ணாமலையே குறிப்பிட்டுள்ளார். அதற்கு பாஜக குறைந்தது 30 இடங்களை கூட்டணியிடம் இருந்து வேண்டும்.

மோதல் '

மோதல் '

ஆனால் தமிழ்நாட்டில் 39 இடங்களே உள்ள நிலையில், அதிமுக 30இடங்களை விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக அதிக இடங்களை கேட்கும் பட்சத்தில்.. அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி தொடராது என்றே கூறப்படுகிறது. அதற்கான அடித்தளம்தான் இப்போது இரண்டு கட்சிக்கும் இடையில் நடக்கும் சண்டை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி.. பாமக - பாஜக போன்ற பிற கட்சிகள் மூன்றாவது அணி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாமக கூட்டணி

பாமக கூட்டணி

பாமக- பாஜக கூட்டணி உருவாக்கலாம் என்று அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாமகவும் திராவிட கட்சிகள் வேண்டாம் என்று மீண்டும் குரல் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில்தான் அன்புமணி - மோடி இருவரும் 20 நிமிடம் வரை பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது. நீங்கள் தலைவரானதில் மகிழ்ச்சி. நீங்கள் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்று மோடியை அன்புமணி பாராட்டி இருக்கிறாராம்.

அப்பா எப்படி இருக்காங்க?

அப்பா எப்படி இருக்காங்க?

அதோடு இல்லாமல்.. உடம்பு நல்லா இருக்கா.. எதுவும் பிரச்சனை இல்லையே என்று திடீரென மோடி ராமதாஸின் உடல்நிலை பற்றி விசாரித்து இருக்கிறார். திடீரென பிரதமர் மோடி, தனது அப்பாவின் உடல் பிரச்சனைகளை நினைவு வைத்து கேட்டதை பார்த்து அன்புமணி ராமதாஸ் வியந்து போய் இருக்கிறாரம். பிரதமர் மோடியின் இந்த நல விசாரிப்பு அன்புமணியை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது., இதையடுத்து கட்சியை நன்றாக வழிநடத்த மோடி அன்புமணிக்கு வாழ்த்து சொல்லி அனுப்பியதாக கூறப்படுகிறது.

English summary
Why did PMK Chief Anbumani Ramadoss meet PM Narendra Modi? நேற்று பிரதமர் மோடியை பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X