'வாடிக்கையாளரே' இல்லாத நிலையில் மத்திய அரசின் SECI ஏன் அதானிக்கு ஒப்பந்தம் தந்தது? புரியாத புதிர்!
டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் இந்திய தொழிலதிபர் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. அதானி மீதான குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, ஜம்மு காஷ்மீர் அரசுகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இதில் மத்திய அரசின் SECI நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்படாமல் கடந்து செல்வது பல கேள்விகளை எழுப்பாமல் இல்லை.
அதானி வழக்கில் அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலானவை:

- மத்திய அரசின் SECI நிறுவனமானது 2020-ம் ஆண்டு 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தங்களை அதானி குழுமம் மற்றும் Azure Power நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டது.
- ஆனால் மத்திய அரசின் SECI நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு மாநில அரசும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க ஒப்பந்தங்களை செய்து கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் அதிகமான விலையை நிர்ணயித்திருந்ததுதான்.
- இதனையடுத்து மாநில அரசுகளின் மின்சார வாரியத்தை, SECI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வைக்க அதானி நேரடியாக களமிறங்குகிறார்.
- 2021-ம் ஆண்டு ஆந்திரா முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நேரடியாக கவுதம் அதானி சந்தித்துப் பேசினார்.
- இப்படித்தான் அதானி நேரடியாக களமிறங்கி மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ரூ2,100 கோடி லஞ்சம் கொடுத்தார்.
- இதனையடுத்து 2021-2023-ம் ஆண்டு காலத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள், SECI நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தைப் பெற ஒப்பந்தங்களும் செய்துவிட்டன.
- அதானி லஞ்சம் கொடுத்த ரூ2,100- கோடியில் ஆந்திராவை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு மட்டும் ரூ1750 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது.
இப்போது மத்திய அரசு நிறுவனமான SECI-க்கு மின்சாரத்தை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களான மாநில அரசுகள் கிடைத்துவிட்டன. இதனையே காட்டி அமெரிக்கா முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ21,000 கோடி முதலீடு பெற்றார் அதானி. ஆனால் லஞ்சம் கொடுத்துதான் மாநில அரசுகளை SECI-க்கு ஒப்பந்தம் போட வைத்ததை மறைத்துவிட்டார் அதானி என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதில்தான் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் முதன்மையான குற்றச்சாட்டுக்குள்ளாகி இருப்பது மத்திய அரசின் SECI நிறுவனமும் அதானி குழுமத்தின் அதானியும். மத்திய அரசு நிறுவனம் வாடிக்கையாளர்களே இல்லாத நிலையில் அதாவது தேவை எதுவுமே இல்லாத நிலையில் என்ன காரணத்துக்காக அதானி குழுமத்துக்கு 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தம் தந்தது? என்பது குறித்து யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லையே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications