எலான் மஸ்க் பிளான்?.. பிரதமர் அலுவலகத்திற்கு திடீரென வந்த "டெஸ்லா" அதிகாரிகள்.. என்ன காரணம்?
டெல்லி: கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் இந்திய பிரதமர் அலுவலகத்தில் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியதாக சர்வதேச ஊடகமான ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சில முக்கிய அதிகாரிகள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டதாக அந்த ஊடகம் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். டெஸ்லாவின் மின்னணு கார்கள் உலகம் முழுக்க பிரபலம்.
ஆட்டோமெட்டிக் டிரைவ் கொண்ட கார்கள், ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கட்டுப்பாட்டு முறை, வித்தியாசமான வடிவமைப்பு என்று டெஸ்லாவின் புதிய மாடல் கார்கள் உலகம் முழுக்க கவனம் ஈர்த்துள்ளது. இப்படிப்பட்ட டெஸ்லா நிறுவன கார்கள் இந்திய மார்க்கெட்டை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

டெஸ்லா
இந்திய மார்க்கெட்டிற்குள் எப்படியாவது வர வேண்டும் என்று டெஸ்லா நிறுவனம் துடித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் மின் கார்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு காரணமாக அந்த நிறுவனம் கார்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்தால் டெஸ்லா கார்கள் விலை குறைவாக இருக்கும். ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்வதை விட நேரடியாக இறக்குமதி செய்யவே அதிக முனைப்பு காட்டுகிறது.

முனைப்பு
இந்தியாவில் இறக்குமதி வரி மிக அதிகமாக இருக்கிறது. இதனால் "இந்தியாவில் கார்களை நாங்கள் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது இறக்குமதி வரி விதிப்பை குறைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் எங்கள் கார்களை நாங்கள் விற்பனை செய்ய முடியும்" என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்து வருகிறது. எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட இந்தியாவில் மிக அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

என்ன மீட்டிங்
இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் இந்திய பிரதமர் அலுவலகத்தில் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இவர்கள் கால் பதிக்க விரும்புவதாகவும், இதற்காக இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இவர்கள் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம்
கடந்த மாதமே இதற்காக இவர்கள் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடந்த நிலையில் இப்போது மீண்டும் இவர்கள் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இறக்குமதி வரியில் இருந்து டெஸ்லா நிறுவனத்திற்கு மட்டும் குறிப்பிட்ட அளவு விலக்கு கொடுக்க வேண்டும்.. உங்களுடைய வரி விதிப்பு முறை எங்களுக்கு பிஸ்னஸ் செய்யும் வாய்ப்பை கொடுக்கவில்லை. இதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

எப்படி வரி விதிப்பு
இந்தியாவில் 40 ஆயிரம் டாலருக்கும் குறைவான மின்னணு கார்களுக்கு 60 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் 40 ஆயிரம் டாலருக்கு அதிகமான கார்களுக்கு 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் டெஸ்லா கார்கள் இரண்டு மடங்கு விலையில் விற்கும். இதனால் அந்த கார்களின் விற்பனை பாதிக்கும். இதன் காரணமாகவே இறக்குமதி வரியை குறைக்க அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்து வருகிறது.

எதிர்ப்பு
இந்த ஆலோசனை மீட்டிங்கில், சில இந்திய அதிகாரிகள் வரியை குறைக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. உலகம் முழுக்க நிறைய மின்னணு கார் நிறுவனங்கள் உள்ளன. உங்களுக்கு மட்டும் வரியை குறைக்க முடியாது. நீங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யலாமே என்று கூறியதாக தெரிகிறது. சில நிர்வாகிகள் டெஸ்லாவின் கோரிக்கையை பரிசீலிக்க அறிவுறுத்தியதாக தெரிகிறது.
Recommended Video

இந்திய நிறுவனங்கள்
அதேபோல் இந்திய நிறுவனங்கள் சிலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்று கூறப்படுகிறது. நாங்களும் இந்தியாவில் மின்னணு கார்கள் தயாரிக்க உள்ளோம். பல நிறுவனங்கள் தயாரிப்பு பணியில் இறங்கிவிட்டது. இப்போது போய் டெஸ்லாவிற்கு வரி விலக்கு கொடுப்பது சரியாக இருக்காது. இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்த வரி விலக்கு முறியடிக்கும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications