1997-2012க்குள் பிறந்த Gen Z தலைமுறையா நீங்கள்? உங்களுக்கு வேகமாக வயதாகுமாம்.. ஷாக் ஆய்வு முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1997 - 2012க்குள் பிறந்த ஜென் இசட் (Gen Z) தலைமுறையினர் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது வேகமாக வயதாகிறார்கள். அதற்கான காரணத்தை நாம் இதில் பார்க்கலாம்.

இந்த உலகில் பெரும்பாலானோருக்கு வயதாவதே பிடிக்காது. நம்மில் அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வயதாகும் செயல்முறையைத் தாமதப்படுத்தவே விரும்புவோம்.

 Why Gen Z actually ageing faster than Millennials and others

ஆனால், என்ன செய்தாலும் சரி வேகமாக வயதானால் அனைவருக்கும் கடுப்பாகவே செய்யும். இப்போது 1997 - 2012க்குள் பிறந்த ஜென் இசட் (Gen Z) தலைமுறை அந்த சிக்கலைத் தான் எதிர்கொள்கிறார்கள். அது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.

ஜென் இசட்: பொதுவாக உலகில் கடந்த காலங்களில் பிறந்தவர்களை ஜென் எக்ஸ், மில்லினியல்கள், ஜென் இசட் என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது 1965 முதல்1980 வரை பிறந்தவர்கள் ஜென் எக்ஸ் என்றும், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். அதேபோல 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் என்று அழைக்கப்படுவார்கள். இதில் ஜென் இசட் தான் இளையவர்கள்.. அப்போது அவர்கள் தானே இளமையாகத் தெரிய வேண்டும்.

ஆனால், உண்மையில் அப்படி இருப்பதில்லை. ஜென் இசட் தலைமுறையினர் மற்ற தலைமுறையினரைக் காட்டிலும் வேகமாக வயதாகிறார்களாம். இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜோர்டான் ஹவ்லெட் என்பவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதாவது 26 வயதே ஆன அவர், தாயுடன் வெளியே செல்லும் போதெல்லாம் அவர்கள் அக்கா- தம்பியா எனப் பலரும் கேட்கிறார்களாம். அதாவது தனக்கு வேகமாக வயதாவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

காரணங்கள் என்ன: அதன் பிறகே இந்த விவாதம் இணையத்தில் சூடு பிடித்தது ஜென் இசட் பிரிவினர் பலரும் தங்களுக்கும் வேகமாக வயதாவதாகக் கூறுகின்றனர். இது இணையத்தில் பெரும் விவாதமானது. இதற்கிடையே ஜென் இசட் பிரிவினர் வேகமாக வயதாக என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஜென் இசட் பிரிவினர் தான் முழுக்க முழுக்க டிஜிட்டல் காலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதனால் அவர்களிடம் வெளியே சென்று விளையாடும் பழக்கமே இருப்பதில்லை.

அதேநேரம் சமூக வலைத்தளத்தில் ஸ்கின் கேர் என்று வரும் பல வித க்ரீம்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவரின் தோலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் யாரோ சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள் என்பதற்காக நாம் இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்தினால் அது ஆபத்தில் தான் முடியும். அதுவும் இப்போது 11- 12 வயதிலேயே இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்துகிறார்கள். இது மிக முக்கியமான ஒரு காரணம்" என்றார்.

மோசமான பழக்கம்: மேலும், இந்த தலைமுறையினருக்குக் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் மிகவும் குறைந்த வயதிலேயே இவர்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றுக்கு அடிமையாகிறார்கள். இன்னும் சிலர் வேறு போதை பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். இவை நமது உடலில் தேவையில்லாத மோசமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதுவும் வயதான தோற்றம் ஏற்பட ஒரு காரணமாக இருக்கிறது.

இதில் உணவு முறை ரொம்பவே முக்கியமானது. இந்த ஜென் இசட் பிரிவினர் மற்ற தலைமுறையினரைக் காட்டிலும் அதிகப்படியான துரித உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பிராசஸ்ட் உணவுகள் நமது உடலில் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இப்போது உணவு டெலிவரி செயலி மூலம் உட்கார்ந்த இடத்திலேயே உணவுகளை ஆர்டர் செய்ய முடிவதால் அதுவும் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.

அழுத்தம்: ஜென் இசட் பிரிவுக்கு இருக்கும் மற்றொரு முக்கிய காரணம் அழுத்தம். மற்ற அனைத்து தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஜென் இசட் அதிக அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதையே ஆய்வுகள் காட்டுகிறது. உலகம் போட்டி நிறைந்த ஒன்றாக மாறும் நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அதிக எதிர்பார்ப்பை வைக்கிறார்கள்.

இது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் லைக் வரவில்லை என்றால் கூட இந்த தலைமுறையினர் அழுத்தத்திற்குள்ளாகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து தான் இந்த தலைமுறையினர் வேகமாக வயதாகக் காரணமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+