வரலாறு காணாத உச்சத்தை நெருங்கும் தங்கம்.. வரும் காலத்தில் மேலும் உயருமா! இப்போது தங்கம் வாங்கலாமா
டெல்லி: தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் இப்படி அதிகரிக்கிறது.. இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து பார்க்கலாம்.
எளிய மக்கள் தங்கத்தைத் தான் எப்போதும் தங்கள் முதல் சேமிப்பாகக் கருதுவார்கள். ஆபத்தான காலகட்டத்தில் நமக்குக் காசு தேவை என்றால் நமக்குப் பெரிதும் உதவியாக இருப்பது தங்கம் தான். இதனால் தான் தங்கத்தைப் பலரும் வாங்கி வருகிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்தமாகப் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போன சமயத்தில் பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவியாக இருந்தது தங்கம் தான்.

தங்கம் விலை
மேலும், கலாசார ரீதியாகவும் தங்கம் இந்தியர்களுடன் பிணைந்து உள்ளது. பிறப்பு, திருமணம் என அனைத்து நல்ல நாட்களிலும் தங்கமே பிரதானம்.. இந்தியாவில் மிகக் குறைந்த அளவே தங்கம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து தான் அவை இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா டாப் இடங்களில் உள்ளது. கடந்த 2021இல் மட்டும் 1,068 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வல்லுநர்கள்
தலைநகர் சென்னையில் 24 கேரட் தங்கம் இப்போது ஒரு கிராம் 5,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் புத்தாண்டில் தங்கம் வாங்கலாம் என்று இருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. நம்ம ஊர் ஆனந்த் சீனிவாசன் தொடங்கிப் பல வல்லுநர்களும் தங்கத்தைச் சேகரிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நிலையில், இப்போது தங்கம் வாங்கச் சரியான நேரமா.. வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையுமா என்பது குறித்து பார்க்கலாம்.

என்ன காரணம்
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையும் ஏற்படக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் அதாவது 18 கிராம் தங்கம் $1,906க்கு வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்கா
இங்குக் கடந்த நான்கு ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளதும் அங்கு மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைவாக உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாகக் கடந்த டிச. மாதம் விலைவாசி சற்று குறைந்துள்ளது. இது விலைவாசி கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கையை அமெரிக்க முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது.

முதலீட்டாளர்கள்
தங்கம் என்பது உலகெங்கும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் ஒரு பொருளாக உள்ளது. எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும் தங்கத்திற்கு மதிப்பு குறையாது. அமெரிக்க டாலர் மதிப்பைப் பொருத்தும் தங்கத்தின் விலை மாற்றம் இருக்கும். அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் தங்கத்தின் விலை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது. பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்.. வரும் காலங்களில் வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி அதிகமாக உயர்த்தாது. இவை அனைத்தும் சேர்ந்து தான் தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

வட்டி விகிதம்
வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயருமா இல்லையா என்பது அமெரிக்க எந்தளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துகிறது என்பதைப் பொறுத்துத் தான் இருக்கும். அமெரிக்காவில் இப்போது பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு வந்துவிட்டாலும் கூட இதையும் அமெரிக்கா அதிகமாகவே பார்க்கிறது. டெக்னிக்கலாக பார்க்கும் போதும் தங்கத்திற்கு 5,500 ரூபாயில் நல்ல ஆதரவு இருக்கிறது. இதனால் அதற்குக் கீழ் தங்கத்தின் விலை குறையப் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை.

வாங்கலாமா
மேற்கு நாடுகளில் வரும் காலத்தில் மந்தநிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், சர்வதேச நாடுகளிடையே ஒருவித பதற்றமான சூழல் நிலவுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து தங்கத்தின் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. உலகில் நிச்சயமற்ற மற்றும் மந்தநிலை ஏற்படும் போதும், போர் போன்ற பதற்றமான சூழல் ஏற்படும் போதும் சர்வதேச முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸாக தங்கம் இருக்கிறது. ரஷ்ய உக்ரைன் போர் முழுமையாக முடிவுக்கு வராத வரை தங்கத்தின் விலை பெரியளவில் குறைய வாய்ப்பு இல்லை. அதேநேரம் நீண்ட கால நோக்கில் எப்போதும் தங்கம் அதிகரித்தே செல்லும் என்பதால் இப்போதும் கூட தங்கத்தை வாங்கத் தொடங்கலாம்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை












Click it and Unblock the Notifications