"டிஸ்மிஸ்!" 3 நாட்களுக்கு ஒரு அதிகாரி நீக்கம்! அதிரடியில் இறங்கி அஸ்வினி வைஷ்னவ்! மிரண்ட அதிகாரிகள்
டெல்லி: இந்திய ரயில்வே துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களாகச் சத்தமின்றி எடுத்து வரும் நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் அதிகப்படியான ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. இந்தியாவில் மிகவும் விரிவான ஒரு உட்கட்டமைப்பை இந்தியன் ரயில்வே கொண்டு உள்ளது.
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் கூட இன்னும் இந்தியன் ரயில்வே லாபகரமானதாக இயங்கவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது.

இந்தியன் ரயில்வே
இதற்கிடையே இந்திய ரயில்வே துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் மத்திய அரசு இயங்கி உள்ளது. ஒரு பக்கம் வந்தே பாரத் என்ற பெயரில் விரைவு ரயிலை இயக்கி பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதேபோல மற்றொரு புறம் முறையாக வேலை செய்தவர்கள், ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அஸ்வினி வைஷ்ணவ் ரயிவ்வே துறை அமைச்சராகப் பதவியேற்றது முதலே இப்படிப் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

139 அதிகாரிகள்
கடந்த 16 மாதங்களில் மட்டும் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு செயல்படாத அல்லது ஊழல் அதிகாரியை ரயில்வே துறை களையெடுத்துள்ளதாக அதிகாரிகள் தவித்து உள்ளனர். இப்படிக் கடந்த 1.5 ஆண்டுகளில் மட்டும் 139 அதிகாரிகளுக்குக் கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 38 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக நேற்று புதன்கிழமை இரண்டு முக்கிய அதிகாரிகளே பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெலியாகி உள்ளது.

மூன்று நாட்களுக்கு ஒருவர்
அவர்களில் ஒருவர் ஐதராபாத்தில் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ கைது செய்தனர். மற்றொருவர் ராஞ்சியில் ரூ. 3 லட்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டவர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக உள்ளார். முறையாக வேலை செய்ய வேண்டும் இல்லையென்றால் உடனடியாக பணியில் இருந்து கிளம்பிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். கடந்த ஜூலை 2021 முதல் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு ஊழல் அதிகாரியை நாங்கள் அகற்றி உள்ளோம்" என்றார்.

அதிகாரம் இருக்கிறதா
ரயில்வே துறை பணியாளர் விதி 56(ஜே) விதியை பயன்படுயுள்ளது. இதன் கீழ் முறையாக வேலை செய்யாத அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மூன்று மாத நோட்டீஸ் பிரியட்டிற்கு ஒரு பிறகு கட்டாயமாக ஓய்வு பெற வைக்கலாம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம். ஒழுங்காக வேலை செய்யாத ஊழியர்களை நீக்கும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. ரயில்வே அமைச்சராக 2021இல் பதவியேற்றது முதலே அஸ்வினி வைஷ்ணவ், பல முறை செயல்படாத ஊழியர்கள் ஓய்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எச்சரித்து இருந்தார்.

ஓய்வூதிய பலன்கள்
ரயில்வே துறையில் மின்சாரம் மற்றும் சிக்னலிங் அதிகாரிகள், மருத்துவம் மற்றும் சிவில் சேவைகள் போக்குவரத்து மற்றும் இயந்திரவியல் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களே பெரும்பாலும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், ஒரு பணியாளருக்கு ஒவ்வொரு ஆண்டும், இரண்டு மாத ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரம் கட்டாயமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த பலன்கள் எதுவும் கிடைக்காது.

கட்டாய பணி நீக்கம்
பலருக்கும் மத்திய அரசுக்கு இந்த அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி வரலாம். உம்மையில், முன்கூட்டியே ஓய்வு தொடர்பான விதிகளின் கீழ், பொது நலன் கருதி அவசியம் ஏற்பட்டால் மத்திய அரசால் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 139 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், அவர்களை ரயில்வே துறை கட்டாய விடுப்பில் அனுப்பி உள்ளது. அதேபோல சிலரை கட்டாயயமாக ஓய்வு பெறவும் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications