கவனிச்சீங்களா.. பாஜக அஸ்திவாரம் ஆடுது.. மோடி +அமித் ஷா +யோகி.. கூட்டமாக எடுத்த 3 அஸ்திரம்! இடிக்குதே
டெல்லி: தேசிய அளவில் பாஜகவின் அஸ்திவாரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் ஆடிப்போய்விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. ஏனென்றால் இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முக்கியமான அஸ்திரம் ஒன்றை எடுத்துள்ளது... அது பயம்!
கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சில அதிரடியான அறிவிப்புகள் இருந்தன. நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது; தேர்தலில் பழைய முறையே தொடரும். பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும்.
பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்றெல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புகள் மக்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றன.
பாஜக எடுத்த அஸ்திரம்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அளவிற்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை கவனம் பெறவில்லை. அதோடு பாரத் ஜோடோ யாத்திரை, நியாய யாத்திரை என்று ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை, இந்தியா கூட்டணி, ராஜ்புத் பிரிவினரின் எதிர்ப்பு என்று தேசிய அளவில் நடக்கும் விஷயங்களும் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முக்கியமான அஸ்திரம் ஒன்றை எடுத்துள்ளது... அது பயம்! அதாவது தேர்தல் பிரச்சாரத்தில் பயமுறுத்த கூடிய ஒன்றை.. எமோஷனலாக தாக்க கூடிய ஒன்றை பாஜக கையில் எடுத்துள்ளது.
மோடி அஸ்திரம்; உதாரணமாக மோடி இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் சொத்துக்களை காங்கிரஸ் கொடுக்கும் என்று கூறினார். இந்துக்களின் சொத்துக்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்துக்களின் தாலியை கூட எடுத்துக்கொள்வார்கள். இந்துக்களின் தங்கத்தை தேடி அவர்கள் வருகிறார்கள். விட மாட்டார்கள், என்று மோடி கூறினார். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அப்படி எந்த அறிவிப்பும் இல்லை.
யோகி அஸ்திரம்: ஷரியத் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் கூறியதாக யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச பிரச்சாரத்தில் பயமுறுத்தினார். ஷரியத் சட்டத்தை கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் சொல்கிறது.. அந்த சட்டம் வந்தால் இந்தியாவிற்கே சிக்கல் ஆகும்.. இந்தியா இஸ்லாமிய நாடாகும் என்றார். ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவிப்பில் அப்படி எதுவும் இல்லை.
அமித் ஷா அஸ்திரம்: பணக்காரர்களுக்கு சொத்து வரி போடப்படும். சாதாரண சொத்து வரி அல்ல பரம்பரை சொத்து வரி. அதாவது பரம்பரையாக உள்ள சொத்திற்கு தனி வரி போடப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதாக அமித் ஷா பயமுறுத்தினார். ஆனால் அப்படி எதுவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை. மாறாக அமித் மால்வியா போன்ற பாஜக நிர்வாகிகள்தான் இதை ஆதரித்து இதற்கு முன் பேசி வந்துள்ளனர்.
இந்த மூன்று டாப் தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக மேற்கண்ட 3 விஷயங்களை அஸ்திரங்களாக எடுத்துள்ளனர். ஆனால் மூன்றுமே பொய்யான விஷயங்கள். 3ம் காங்கிரஸ் மூலம் அறிவிக்கப்படாத அறிவிப்புகள். பாஜக கேம்ப் அச்சத்தில் இருக்கிறதோ.. அதனால்தான் திடீரென இப்படி எல்லாம் தீவிரமான விஷயங்களை பயமுறுத்தும் வகையில் மக்களிடம் பேச தொடங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications