இதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.. தூக்கு மேடைக்கு போய் தப்பித்த நிமிஷா.. ஏமன் இறங்கி வந்தது ஏன்?
சென்னை: கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்படாது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனினும், புதிய தேதி எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. கேரள செவிலியரின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் நிறுத்தி வைக்க தற்காலிகமாக பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இறங்கி வந்ததே காரணம் என்கிறார்கள்.
கேரளாவை சேர்ந்த காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் செய்த போன் கால் மூலமே நிமிஷா தற்காலிகமாக தப்பித்துள்ளார். ஷேக் அபுபக்கர் அஹ்மத், காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் இந்தியாவின் பத்தாவது மற்றும் தற்போதைய கிராண்ட் முஃப்தி ஆவார். மேலும், அகில இந்திய ஸுன்னி ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
கிராண்ட் முஃப்தி: பொறுப்புகளும் அங்கீகாரமும்
சமஸ்தா கேரள ஜெம்-இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராகவும் இவர் உள்ளார். அகில இந்திய ஸுன்னி ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக, ஷேக் அபுபக்கர் அஹ்மத் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அவரின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் நாட்டின் இஸ்லாமிய சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். ஏமனில் இருக்கும் இஸ்லாமிய தலைவர்கள் மூலமாக இவர் செய்த போன் கால்தான் இந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட காரணம்.

நிமிஷா பிரியா கொன்ற ஏமன் நாணயம்' அல்லது நிதி இழப்பீடாக 1 மில்லியன் டாலர்கள் (ரூ. 8.6 கோடி) வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட போதும் கூட அவர்கள் குடும்பம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய தலைவர்கள் மூலம் நடத்தப்பட்ட சில ஆலோசனைகளுக்கு பிறகு அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. .
டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் குடும்பத்திற்கு ' இந்த வழக்கில் இந்திய அரசு ஆரம்பம் முதலே அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட தலால் குடும்பத்தினர் உடன் பரஸ்பரம் உடன்படக்கூடிய தீர்வைக் காண்பதற்கு கூடுதல் அவகாசம் கோரி சமீப நாட்களாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால் அது எதுவும் பயன் அளிக்கவில்லை. இந்திய அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில்தான் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் செய்த போன் கால மூலமே நிமிஷா தற்காலிமாக தப்பித்துள்ளார். ஏமனில் உள்ளூர் சிறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, தனது ஏமன் நாட்டு வணிக பங்குதாரரான மஹ்தியை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அவரது இறுதி மேல்முறையீடு 2023 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. அவர் தற்போது ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சாதாரண விஷயம் கிடையாது
ஏமன் வரலாற்றில் இந்தியர் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இதுவே முதல்முறை. வரலாற்றில், இதுவரை நிமிஷா பிரியாவுக்கு மட்டுமே மரண தண்டனையிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. வேறு எந்த இந்தியருக்கும் இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் ஏமனில் இந்தியர்கள் யாரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. நிமிஷா பிரியா மட்டுமே அங்கு மரண தண்டனையை எதிர்நோக்கும் இந்தியர் ஆவார்.
பிற நாடுகளில் மரண தண்டனையிலிருந்து விடுதலையான இந்தியர்கள்: ஏமனைத் தவிர, மற்ற நாடுகளில் மரண தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற சில இந்தியர்கள்,
மச்சிலகத்து அப்துல் ரஹீம் (கோழிக்கோடு, கேரளா)
2006-ல் சவுதி அரேபியாவில் தனது முதலாளியின் 15 வயது மகனைத் தற்செயலாகக் கொன்றார். மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவரது சமூகம் ₹34 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை திரட்டிய பிறகு 2024-ல் மன்னிக்கப்பட்டார்.
கத்தாரில் இந்திய கடற்படையின் எட்டு முன்னாள் வீரர்கள்
2022-ல் கைது செய்யப்பட்டு உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் தண்டனைகள் சிறைத்தண்டனைகளாகக் குறைக்கப்பட்டன. பின்னர் 2024-ன் ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டனர்.
பெக்ஸ் கிருஷ்ணன் (திருச்சூர், கேரளா) - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
2013-ல் ஒரு விபத்தில் மரணம் ஏற்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொழிலதிபர் யூசுப் அலி ₹1 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தியதைத் தொடர்ந்து 2021-ல் விடுவிக்கப்பட்டார்.
அர்ஜுனன் ஆதிமுத்து (தஞ்சாவூர், தமிழ்நாடு) - குவைத்
2013-ல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றார். சுமார் ₹30 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்திய பின் 2017-ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications