எந்த இடமும் பாதுகாப்பு இல்லை.. அரண்டு நிற்கும் பாகிஸ்தான்! நரம்புகளுக்கும் ஊடுருவிய அச்சம்.. பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாத அமைப்புகள், அந்நாட்டு அரசு என்று மொத்த கட்டமைப்பு இந்த மாத தொடக்கத்தில் இந்தியா நடத்திய தாக்குதல்கள் காரணமாக அரண்டு போய் இருக்கிறதாம்.
பாகிஸ்தானுக்குள் எந்த ஒரு இலக்குகளையும் தாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டி'குன்ஹா தெரிவித்து உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பின்னணி பற்றி பேசிய அவர், தேவைப்பட்டால் பாகிஸ்தான் நாட்டிற்குள் எந்த ஆழத்திலும் தாக்குதல் நடத்த இந்திய ஆயுதப் படைகள் முழுமையாகத் தயாராக உள்ளன. முழு பாகிஸ்தானும் எல்லைக்குள் உள்ளது.. பாகிஸ்தான் இராணுவம் தனது பொதுத் தலைமையகத்தை (GHQ) ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்க்வா (KPK) போன்ற பகுதிகளுக்கு மாற்றினாலும் நாம் தாக்க முடியும்.. அவர்களால் ஒழிந்து கொள்ள கூடிய இடம் என்று எதுவும் இல்லை, என்று கூறி உள்ளார். இதற்கு பின் பல காரணங்கள் உள்ளன.
1. இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும். துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2. பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார். இதன் மூலம் இந்தியா பாகிஸ்தானின் எந்த தீவிரவாத தளவாடத்தையும் கண்டுபிடிக்க முடியும். தளவாடங்களை கண்டுபிடிப்பதோடு அதை எளிதாக தாக்கி அழிக்க முடியும்.

3. இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவமே அறிவித்தது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,
1.. நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
2. PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
3. PAF முரிட் விமான தளம், சக்வால்
இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் அடிமடியில் இந்தியா கைவைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த தளங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் முதுகெலும்பாக கருதப்படும் ராணுவ அமைப்புகள் ஆகும்.
4. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.
நூர் கான் விமானப்படை தளம், ராவல்பிண்டி
VIP & ஸ்ட்ராட்டஜிக் போக்குவரத்து மையம் - உயர் மட்ட இராணுவ மற்றும் அரசாங்க போக்குவரத்தை கையாளும் மையம். அவசர காலத்தில் பிரதமரே இங்கிருந்துதான் தப்பிக்க வேண்டும். இது தாக்கப்பட்டு உள்ளது.
தலைநகருக்கு அருகாமையில் உள்ளது - பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராணுவ நரம்பு மையமான இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பிற்கு அருகில் உள்ளது.
ஏர் மொபிலிட்டி கமாண்ட் - பாகிஸ்தான் முழுவதும் விமான தளவாடங்கள் மற்றும் துருப்புக்களின் இயக்க நடவடிக்கைகளை கண்காணிக்கும், கட்டளைகளை இடும் ஏர் மொபிலிட்டி கமாண்ட் இங்கே உள்ளது.
இராணுவ-சிவில் ஒருங்கிணைப்பு - பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துடன் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இராணுவ மற்றும் சிவில் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது.
விரைவான செயல்பாடு - தேசியத் தலைமை அல்லது எல்லைகளுக்கு அருகில் நெருக்கடி ஏற்பட்டால் விரைவாகப் படைகளை நிலைநிறுத்த முடியும். இதை இந்தியா தாக்கி உள்ளது.
PAF ரஃபிகி விமானப்படை தளம், ஷோர்கோட்:
முன்னணி போர் விமானப்படை தளம் - JF-17 தண்டர் மற்றும் F-7PGகள் உள்ளிட்ட போர் விமானப்படைப் பிரிவுகள் இங்கேதான் உள்ளன. .
விமானப்படை மையமாக அமைந்துள்ளது - கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை விரைவாக அணுகுவதற்கான விமானப்படை மையமாக அமைந்துள்ளது.
பயிற்சி மற்றும் செயல்பாடுகள் - போர் பயிற்சி பயிற்சிகள் மற்றும் நேரடி-தாக்குதல் பயிற்சிகள் இங்கேதான் நடக்கும்.
பங்கர் - இங்கே பங்கர்கள் உள்ளதாக நம்பபப்டுகிறது.
முக்கிய விமானப்படை தளம் - பாகிஸ்தானின் இரண்டாம் நிலை தளமாக செயல்பட முடியும். இதை இந்தியா தாக்கி உள்ளது.
PAF முரிட் விமானப்படை தளம், சக்வால்
ஏவுகணை பயன்பாடு - ஏவுகணையை பயன்படுத்தும் விமானப்படை தளம் ஆகும்.
பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு இடம் - எல்லையில் நடக்கும் அச்சுறுத்தலில் இருந்து விலகி, உள்நாட்டில் ஆழமாக அமைந்துள்ளது. ஆனால் இதையும் இந்தியா தாக்கி உள்ளது.
மின்னணு போர் - ரேடார், கண்காணிப்பு மற்றும் ஆதரவு விமான நடவடிக்கைகளை நடத்தக்கூடும்.
மத்திய கட்டளை - பஞ்சாப் பகுதியில் வான் பாதுகாப்பை வழங்குகிறது. இரண்டாம் கட்ட விமானப்படை மத்திய கட்டளை அமைப்பாக செயல்படுகிறது. இதையும் இந்தியா தாக்கி உள்ளது.
5. பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா பயன்படுத்த வாய்ப்பு குறைவு என்றே பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் இந்திய ராணுவம் அதையும் இந்த போர் பயன்படுத்தியது . ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தகர்க்க இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தினார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் விமானப்படை வீழ்ந்துவிட்டது.. சீனா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்றதாக இருந்தது என்று கூறினார்.
நமது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அமைப்பு கைகொடுத்தது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழிக்க இவை செயல்பட்டதால் பாகிஸ்தான் வீழ்ந்துவிட்டது. சீனாவிலிருந்து கடனுக்கு வாங்கப்பட்ட அதன் சொந்த வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு கைகொடுக்கவில்லை.
நமது விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது மற்றும் பாகிஸ்தானில் பல இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பிரம்மோஸ் ஏவுகணைகளை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. சீனாவின் தடுப்பு அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை, என்று அமித் ஷா குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications