"படுக்கை அறையோட நிறுத்திக்கணும்.." ஒலிம்பிக் விழாவில் இப்படியா.. டென்ஷனான கங்கனா ரனாவத்! என்னாச்சு
டெல்லி: ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கியது. இருப்பினும், இந்த தொடக்க விழாவில் இடம் பெற்றிருந்த சில நிகழ்ச்சிகள் குறித்த உலகளவில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே பிரபல பாலிவுட் நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத்தும் இதைச் சாடியுள்ளார். மேலும், செக்ஸ் என்பது படுக்கையறையில் இருக்க வேண்டியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விமர்சனம்: அதேநேரம் இந்த நிகழ்வில் இடம்பெற்றிருந்த சில நிகழ்வுகள் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக இந்த தொடக்க விழாவின் ஒரு பகுதியாக 18 கலைஞர்களைக் கொண்டு லியோனார்டோ டா வின்சியின் "தி லாஸ்ட் சப்பர்" தொடர்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர்.
இது தான் இப்போது இணையத்தில் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. தி லாஸ்ட் சப்பர் என்பது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேமில் பகிர்ந்துகொண்ட இறுதி உணவு என்பதே நம்பிக்கையாகும். இது புனித வியாழன் அன்று கிறிஸ்தவர்களால் நினைவுகூரப்படுகிறது .
தி லாஸ்ட் சப்பர்: இது தொடர்பாக லியோனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம் தான் "தி லாஸ்ட் சப்பர்" என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான பெர்பாமன்ஸ் தான் இப்போது விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாகப் பாலிவுட் நடிகையும் மாண்டி தொகுதி எம்பியுமான கங்கனா ரனாவத், "லாஸ்ட் சப்பர் குறித்த இந்த நிகழ்வில் குழந்தைகளை வேறு பயன்படுத்தி இருக்கிறார்கள். இது கடுமையாக விமர்சிக்கிறேன். ராணிகள் போல பேக்அப் போட்டுக் கொண்டு இருக்கும் ஆண்களுடன் இந்த குழந்தையை இந்த நிகழ்வில் பயன்படுத்தி இருப்பது தவறான முன்னுதாரணம்" என்று சாடியுள்ளார்.
மேலும் ஒரு நிர்வாண மனிதனை நீல வர்ணம் பூசிய இயேசுவாக காட்டி கிறிஸ்தவத்தையும் கேலி செய்துள்ளதாகச் சாடியுள்ளார்.. ஒலிம்பிக் தொடக்க விழாவை இடதுசாரிகள் ஆக்கிரமித்துவிட்டதையே இது காட்டுகிறது... இது மிகப் பெரிய அவமானம் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ஒலிம்பிக் தொடக்க விழாவில் அனைத்துமே தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியதாகவே இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

படுக்கையறையில் இருக்க வேண்டியது: இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "நான் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான நபர் இல்லை.. ஆனால் இது எனது கருத்து பற்றியதே இல்லை.. ஒலிம்பிக் போட்டிக்கும் பாலின சார்புக்கும் என்ன சம்பந்தம்? விளையாட்டும் அனைத்து நாடுகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதும் சிறப்பானது.. அதை ஏன் செக்ஸ் ஓவர்டேக் செய்ய வேண்டும்.. செக்ஸ் என்பது படுக்கையறைகளில் இருக்க வேண்டியது தானே? அது ஏன் தேசிய அடையாளமாக இருக்க வேண்டும்? வினோதமான விஷயம் தான்" என்று அவர் சாடியுள்ளார்.
"தி லாஸ்ட் சப்பர்" தொடர்பான அந்த பெர்பாமன்ஸ் எதைப் பற்றியது என்பது குறித்து ஒலிம்பிக்கை ஒருங்கிணைத்த பிரான்ஸ் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர். இருப்பினும், அதை ஏற்க மறுத்து பலரும் பிரான்ஸை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கும் இதைக் குறிப்பிட்டு.. இது கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல் எனச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications