கொரோனா பாதிப்பு இருக்கட்டும்.. மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது ஏன் தெரியுமா?
டெல்லி: கொரோனா பாதிப்பு இருக்கட்டும், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது ஏன் என்பது குறித்து மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனிடையே பஞ்சாப், தமிழகம், ஒடிஸா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

ஊரடங்கு
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மேலும் சில நாட்களுக்கு நாம் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.

குழப்பம்
மேற்கண்ட மாநிலங்கள் ஏப்ரல் 30 வரையும் , மே 1 வரையும் ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் தற்போது பிரதமர் மே 3 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு என்றால் விடுமுறை நாளான மே 1-ஆம் தேதி நாம் பணிக்குத் திரும்ப வேண்டுமா என்ற குழப்பம் நிலவும்.

ஊரடங்கு
சரி மே 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு என அறிவித்தால் மே 2, 3 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் அப்போது பணிக்கு செல்ல வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கும். எனவே பொத்தம் பொதுவாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோடி
ஊரடங்கு தளர்வு குறித்த விதிமுறைகள் நாளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என மோடி அறிவித்துள்ளார். அது போல் பள்ளிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை என்பதால் அவர்களுக்கு வழக்கம் போல் விடுமுறையால் பள்ளி செல்ல வேண்டியதில்லை. ஆனால் கல்லூரிகள் குறித்த எந்த வித அறிவிப்பும் இல்லை. எனவே நாளை வெளியாகும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா இல்லை மே 3 ஆம் தேதி அன்று தகவல்கள் தெரிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications