கொரோனா அறிகுறிகள் இருந்தும்.. நெகடிவ் முடிவுகள் வருவது ஏன்? அலட்சியம் வேண்டாம்.. இதை படிங்க
டெல்லி: இந்தியாவில் RT PCR சோதனைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அறிகுறிகள் இருந்தும்கூட சுமார் 20% பேருக்குச் சோதனைகளில் கொரோனா நெகடிவ் என்றே முடிவுகள் வருவது மருத்துவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளதால், வைரஸ் பரிசோதனைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அறிகுறிகள் இருந்தாலும் சுமார் 20% பேருக்குச் சோதனையில் கொரோனா இல்லை என்றே முடிவுகள் வருவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா நெகடிவ் முடிவுகள் காரணமாக உடல்நிலை மோசமாக இருக்கும் பலரையும் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் அவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆர்டி பிசிஆர் சோதனை
கொரோனா வைரசை கண்டறியப் பல வழிகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் ஆர்டி பிசிஆர் சோதனைகளிலேயே முடிவுகள் துல்லியமாகக் கிடைக்கும். அதிலும்கூட சுமார் 5% வரை தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த சில காலமாக இந்தியாவில் அதிகளவில் தவறான முடிவுகள் கிடைப்பதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும், தற்போதுவரை இது குறித்து எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குறைவான வைரஸ் இருந்தால்
இதற்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் 5ஆம் நாளில் தான் உடலில் தீவிரமடையும். எனவே, அதற்கு முன் ஒருவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டால், அவரது உடலில் வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இதனால் சோதனை முடிவுகளில் நெகடிவ் என்ற வரும், கடந்த சில காலமாக கொரோனா நெகடிவ் முடிவுகளைப் பெற்ற பலருக்கு மீண்டும் நடத்தப்பட்ட சோதனைகளில் கொரோனா பாசிடிவ் என முடிவுகள் கிடைத்துள்ளன.

கொரோனா சோதனை மையங்கள்
கடந்த 2020 பிப்ரவரி மாதம் நாட்டில் கொரோனாவை கண்டறிய 14 சோதனை மையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 2,400ஆக அதிகரித்துள்ளன. இவ்வளவு குறைவான நாட்களில் அதிக அளவில் ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கானோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இவை மேற்கொள்ளப்பட்டதால், அனைவருக்கும் முறையான பயிற்சிகள் கிடைத்திருக்கும் எனக் கூற முடியாது. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

மனித தவறுகள்
கொரோனா பரிசோதனையில் பல்வேறு இடங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. RT PCR சோதனையில் மனித தேவை அதிகமாகவே இருக்கும். மாதிரிகளைச் சேகரிப்பது முதல் முறையான வெப்ப நிலையில் சேமிப்பது வரை மனித தேவை இதில் அதிகம். எனவே, இதில் எங்கு தவறு நடந்தாலும் ஆய்வு முடிவில் கொரோனா நெகடிவ் முடிவே கிடைக்கும். எனவே அவ்வப்போது சோதனை நிலையங்களில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற ஆய்வுகள் மிக அரிதாகவே செய்யப்படுகின்றன.

உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனா வகைகள் மற்றொரு முக்கிய காரணம். ஆர்டி பிரிஆர் சோதனைகளில் கொரோனாவின் ஒரு பகுதி, உடலில் உள்ளதா என்பதைக் கண்டறியவே சோதனை இருக்கும். இதனால் உருமாறிய கொரோனா வகைகள் ஆர்டிபிசிஆர் சோதனைகளில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது. முக்கியமாகப் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வகை சோதனைகளில் தப்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறைந்த விலை
கடந்த ஆண்டு ஒரு RT PCR சோதனை கருவியின் விலை 1,100 ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது அதன் விலை 40க்கும் கீழாகக் குறைந்துள்ளது. RT PCR சோதனை கருவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த, இறக்குமதி வரிச் சலுகையையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் ரத்து செய்துவிட்டது. இதனால் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறிவிட்டன. இந்திய நிறுவனங்களும் 100 ரூபாய்க்குக் கீழ் RT PCR சோதனை கருவிகளை விற்க விரும்பவில்லை. குறைவான விலையில் கிடைக்கும் RT PCR சோதனை கருவிகளின் தரம் சரியான நிலையில், இல்லையென்றாலும் முடிவுகள் தவறாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications