கல்யாணம் எதற்கு செய்யனும்.. இளைஞர்களிடம் வந்த புது ட்ரெண்ட்.. உலகம் எதை நோக்கி போகுது புரியுதா?
டெல்லி: சர்வதேச அளவில் திருமணம் செய்து கொள்வோரின் விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது குறித்து அதிர்ச்சி தரும் சில முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
உலகின் மக்கள்தொகையில் டாப் இடத்தில் இருந்த சீனா, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. அதைத் தொடர்ந்து சீனாவில் மக்கள் தொகை சரியத் தொடங்கியது. அங்கே மக்கள் தொகை சரிவு மட்டுமின்றி திருமண விகிதங்களும் கூட குறைந்தது.

ஆனால், இந்தப் பிரச்சினை சீனாவில் மட்டும் நடப்பதில்லை. உலகின் அனைத்து நாடுகளிலும் இப்படி திருமணம் செய்து கொள்வோர் விகிதம் தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
திருமணம்: முன்பு சமூகத்தில் "திருமணம்" என்ற வார்த்தைக்கு இருந்த அதே முக்கியத்துவம் இன்றைய உலகில், "திருமணம்" என்ற சொல்லிற்கு இருப்பதில்லை. டேட்டிங், லிவ் இன் உறவுகளில் இருப்பது தான் இப்போது அதிகரித்துள்ளது. நமது சமூகத்தில் இளைஞர்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றமே திருமணங்கள் குறையக் காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் மாற்றம் இல்லை. நம்மைச் சுற்றிலும் இந்த மாற்றம் நடக்கிறது. நமக்குக் கிடைக்கும் புள்ளி விவரங்களும் கூட இதையேதான் காட்டுகிறது.
சீனாவில் கடந்த 1986ஆம் ஆண்டு 13 கோடி திருமணங்கள் நடந்துள்ளன. அப்போது இருந்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் சீனாவின் மக்கள் தொகை இப்போது பல மடங்கு அதிகரித்த போதிலும், கடந்த 2021இல் திருமணங்கள் 60 லட்சமாகக் குறைந்துள்ளது. சீனா மட்டுமின்றி சர்வதேச அளவில் இதே தான் நடக்கிறது. உலகில் இப்போது இருக்கும் மக்கள்தொகையில் சுமார் 89.9% பேர் திருமண விகிதங்கள் குறைந்து வரும் நாடுகளில் தான் வசிக்கின்றனர்.
தயங்கும் இளைஞர்கள்: இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. டெக்னாலஜி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றால் இன்றைய இளைஞர்களின் முடிவெடுக்கும் செயல்முறை வெகுவாக மாறி இருக்கிறது. திருமணங்கள் குறைவது அதைக் காட்டுவதாகவே இருக்கிறது. இளைஞர்கள் தங்கள் சுதந்திரம், நிதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் திருமணம் மற்றும் குழந்தைகள் ஆகியவற்றில் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் திருமணத்தைத் தவிர்த்து டேட்டிங் மற்றும் லிவ் இன் உறவுகளில் இருக்கவே இப்போது இளைஞர்கள் விரும்புகிறார்களாம். இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு 2 கோடியில் இருந்து 8.24 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்: இந்த காலத்து இளைஞர்கள் திருமணம் வேண்டாம் எனச் சொல்லப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். திருமணத்திற்கு ஆகும் செலவு, குழந்தைகளை வளர்ப்பது ஆகியவை அவர்கள் சொல்லும் முக்கிய காரணமாக இருக்கிறது. திருமண செலவுகளைத் தவிர்க்க இப்போது பலரும் இன்டிமேட் முறையில் (Intimate wedding) திருமணம் செய்கிறார்கள். அதாவது அதிகப்படியான நபர்களை அழைக்காமல் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்து கொள்ளும் முறை தான் இந்த இன்டிமேட் திருமணமாகும்.
கொரோனாவுக்கு முன்னதாகவே 2கே கிஸ்ட் இந்த இன்டிமேட் திருமண முறையிலேயே ஆர்வம் காட்டினர். அதிகரிக்கும் விலைவாசி, பணவீக்கம், வாழ்க்கைச் செலவு ஆகிய பொருளாதார காரணங்கள் இளைஞர்கள் திருமணத்தைத் தாமதப்படுத்தவும் முற்றிலும் தவிர்க்கவும் காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் லிவ்இன்: மேலும், திருமணம் செய்யும் முறையும் கூட இந்தியாவில் மாறியிருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியர்களில் சுமார் 50% பேர் திருமணத்திற்கு முன்பு ஒருவர் குறித்து அறிந்து கொள்ள லிவ் இன் உறவில் வாழ விரும்புவதாக விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்ன பிரச்சினை: திருமணங்கள் குறைவது அத்துடன் நிற்பதில்லை. அது சங்கிலித் தொடர் போல வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதாவது இளைஞர்கள் திருமணம் செய்ய ஆர்வம் காட்டாமல் இருப்பது குழந்தை பிறப்பு விகிதத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இது மக்கள் தொகை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. ஏற்கனவே, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இதனால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications