இந்த வருடத்தின் சிறந்த ஜோக் இதுதான்.. தமிழிசையே சொல்லிட்டாங்க!

பிரதமர் மோடி பிரியங்கா காந்தியை பார்த்து பயப்படுகிறார் என்பதுதான் இந்த வருடத்தின் சிறந்த காமெடி என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முழு நேர அரசியலில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிரடி- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி பிரியங்கா காந்தியை பார்த்து பயப்படுகிறார் என்பதுதான் இந்த வருடத்தின் சிறந்த காமெடி என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பெரிய உதவும் என்று கூறுகிறார்கள்.

    லோக் சபா தேர்தலில் பிரியங்காவின் வருகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதுகுறித்து தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழிசை பேட்டி

    தமிழிசை பேட்டி

    தமிழிசை சௌந்தரராஜன் தனது பேட்டியில், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா முன்னிலை படுத்தப்படுவது ராகுல் காந்தியின் பலவீனத்தை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமை பலம் இல்லாமல் இருப்பதால்தான் தற்போது ராகுல் காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தி முன்னிலைப்படுத்தப்படுகிறார். ராகுல் பலம் இல்லாத தலைவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    தமிழிசை கருத்து

    தமிழிசை கருத்து

    காங்கிரஸ் கட்சியை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அந்த கட்சியை பார்த்து மக்கள் பரிதப்படுகிறார்கள் . அந்த கட்சியின் தற்போதைய நிலையை நினைத்தும், ராகுல் காந்தியை பார்த்தும் அந்த கட்சி தொண்டர்கள்தான் பரிதாபப்படுகிறார்கள். யாரை முன்னிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற நிலைக்கு அந்த கட்சி சென்றுவிட்டது.

    பிரியங்கா தேர்தல்

    பிரியங்கா தேர்தல்

    பிரியங்கா தேர்தல் நேரத்தில் வந்து பிரச்சாரம் செய்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே இப்படி காங்கிரஸ் செய்துள்ளது. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பிரசாரத்துக்கு களம் இறக்கி பரிசோதித்து பார்த்தது. ஆனால் அப்போதே காங்கிரஸ் தோல்வி கண்டது. இது ராகுல் தோல்வி. பிரியங்காவின் வருகையை கொண்டாடும் நபர்கள், ராகுலின் தோல்வியை சேர்த்து கொண்டாடுவதே சரியாக இருக்கும்.

    ராகுல் மீது நம்பிக்கை

    ராகுல் மீது நம்பிக்கை

    ராகுல் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. ராகுல் மீது அவரது கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கை வைக்கவில்லை. ராகுல் தன்னையே நம்பவில்லை என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் அவர் பிரியங்காவை களமிறக்கி இருக்கிறார். இதை அவர்களின் செயலே காட்டுகிறது.

    சிறந்த ஜோக்

    சிறந்த ஜோக்

    பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுகிறார் என்பதை ஏற்க முடியாது. அப்படி சொல்வதுதான் இந்த வருடத்தின் சிறந்த காமெடி. மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கூறுவதுதான் இந்த ஆண்டின் சிறந்த ஜோக். மோடியை பார்த்து பயந்துதான் காங்கிரஸ் பிரியங்காவை களமிறக்கி இருக்கிறது என்பதே சரியானதாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+