"இந்து கடவுள் ஓகே.. அம்பேத்கர் படம் எல்லாம் கேட்க மாட்டீங்களா!" கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் நறுக் பதில்
டெல்லி: ரூபாய் நோட்டுகளில் இந்துக் கடவுள்கள் படம் இடம் பெற வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது காங்கிரஸும் கருத்து தெரிவித்து உள்ளது.
ஆம் ஆத்மி இப்போது டெல்லியைத் தாண்டி மற்ற மாநிலங்களில் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அவர்கள் ஏற்கனவே பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துவிட்டனர்.
இப்போது ஆம் ஆத்மி அடுத்து குஜராத் மாநிலத்தில் குறி வைத்து உள்ளன. இந்தாண்டு இறுதியில் அங்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் கணிசமான இடங்களைப் பெறும் முயற்சியில் கெஜ்ரிவால் இறங்கி உள்ளார்.

குஜராத்
மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே பல மாதங்களுக்கு முன்பே கெஜ்ரிவால் குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். தொடர்ச்சியாக அவர் குஜராத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அங்குள்ள ஆட்டோ டிரைவர் வீட்டில் அவர் இரவு உணவு உண்ட சம்பவம் எல்லாம் கூட பேசு பொருளானது. எப்படியாவது குஜராத்தில் கால்தடம் பதிக்க வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக உள்ளது.

கெஜ்ரிவால்
இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "புதிய ரூபாய் நோட்டுகளில் தெய்வங்களின் படங்கள் இடம்பெற வேண்டும். ஒரு பக்கம் காந்தியின் படமும் மறுபக்கம் இந்து தெய்வங்கள் விநாயகர் மற்றும் லக்ஷ்மியின் படங்கள் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக மிக விரைவில் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுத உள்ளேன்" என்று அவர் கூறியிருந்தார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து பேசுபொருள் ஆனது.

காங்கிரஸ் பதிலடி
இந்நிலையில், இதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். கெஜ்ரிவால் கருத்தை ட்விட்டரில் பகிர்ந்த மணீஷ் திவாரி, "புதிய கரன்சி நோட்டுகளில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் படத்தை ஏன் வைக்கக்கூடாது? ஒரு பக்கம் காந்தி.. மறுபக்கம் அம்பேத்கர் படம் இருந்தால் எப்படி இருக்கும். அகிம்சை, ஜனநாயகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்திய இந்திய மேதைகள் ஒரே இடத்தில் இப்படி இணைவது மிகச் சிறப்பானதாக இருக்கும்" என்று கூறி உள்ளார்.

கோரிக்கைகள் கிளம்பும்
அதேபோல காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. கரன்சி நோட்டுகளில் லட்சுமி தேவி படம் இடம் பெறலாம் என்று சொல்வதில் தவறு இல்லை. ஆனால் பழங்கால முறைகளைப் பின்பற்றத் தொடங்கினால், இதேபோல பலரும் கரன்சி நோட்டுகளில் பல தெய்வங்களின் படங்களை இடம் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பும்" என்றார்.

பாஜக மவுனம்
கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துக்கு பாஜக இதுவரை நேரடியாக எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. அதேநேரம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிதிஷ் ரானே கிண்டல் செய்யும் வகையில் பதில் அளித்து உள்ளார். அவர் சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்துடன் கூடிய போலியான ஒரு 200 ரூபாய் நோட்டின் படத்தைப் பகிர்ந்து, "இது தான் சிறப்பாக இருக்கும்" என்று பதிவிட்டு உள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications