அரசு ஊழியர்களுக்கு அமோக காலம்.. மோடி மூவ்.. தமிழக அரசுக்கு மிகப்பெரிய செக்.. வேற சான்ஸே இல்லை!
டெல்லி: பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அதே பழைய ஓய்வூதிய ஸ்டைலை கொண்ட, ஆனால் கூடுதல் பலன்களை கொண்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தமிழக அரசுக்கு இதன் மூலம் பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் அல்லது இதே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

அதாவது 50% சதவிகித சம்பளத்தை ஓய்வூதியமாக அளிப்பது + அகவிலைப்படி தருவது இரண்டும் சேர்த்து கொடுப்பது அவசியம் ஆகி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு இதன் மூலம் மத்திய அரசு செக் வைத்துள்ளது.
பழசு புதுசு வேறுபாடு: தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
வித்தியாசம்:ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். ஏப்ரல் 1, 2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு NPS பொருந்தும்.
அதுவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறிப்பாக குறைந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு, அடிப்படை நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறைந்தபட்சம் ₹10,000 மாத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில்தான் மத்திய அரசின் இந்த மூவ் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய செக்காக அமைந்து உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications