டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்கு சந்தை சரிவு ஏன்? நிபுணர்கள் கூறுவது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்கு சந்தை சரிவு ஏன் என்பது குறித்து நிபுணர்கள் சில காரணங்களை விளக்கியுள்ளனர்.

2020-2021-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

அதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 987.96 புள்ளிகள் குறைந்து 39,735.53 புள்ளிகளாக இருந்தது. அது போல் நிஃப்டியில் 11,700 புள்ளிகளாக இருந்தது. நேற்று தொடக்கத்தில் 1092 புள்ளிகளா தொடங்கிய நிலையில் 988 புள்ளிகள் சரிவுகளுடன் முடிந்தது.

 பங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் பங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்

புள்ளிகள்

புள்ளிகள்

அது போல் நிஃப்டியும் 11,661 புள்ளிகளுடன் முடிந்தது. அதாவது ஒட்டுமொத்தமாக பார்த்தால் மும்பை பங்குச் சந்தை -2.43 சதவீதமும் தேசிய பங்கு சந்தை -2.51 சதவீதமும் சரிவை கண்டது. புதிய வருமான வரி விதிப்பு முறை, ஈவுத் தொகை விநியோக வரியை நிறுவனங்களிடமிருந்து தனிநபர்களுக்கு மாற்றியது, பங்கு சந்தையில் நீண்ட நாள் மூலதன ஆதாய வரி தொடர்பாக எந்த சலுகையும் இல்லாதது ஆகியவையே பங்கு சந்தை சரிந்துள்ளது.

11 ஆண்டுகளில்

11 ஆண்டுகளில்

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த போது கடந்த 2009-ஆம் ஆண்டு தாக்கல் செய்து வந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த முறை பங்கு சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணங்களாக 5 முக்கிய அம்சங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முதலாவது நீண்ட நாள் மூலதன ஆதாய வரி மற்றும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி ஆகியவை குறித்து 2020 மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

பங்கு சந்தை

பங்கு சந்தை

கடந்த 2018ஆம் ஆண்டு நீண்ட நாள் மூலதன ஆதாய வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையானது நீண்ட காலம் வைத்திருக்கும் பங்குதாரர்களை ஊக்குவிப்பதாக இல்லை. மேலும் இதனால் பணப்புழக்கமும் குறைகிறது. எனவே பங்குகளின் மீதான நீண்ட நாள் மூலதன ஆதாய வரியை நீக்கியிருந்தால் அது பங்குச் சந்தைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

வரி விதிப்பு

வரி விதிப்பு

அது போல் ஈவுத் தொகை விநியோக வரியை நிறுவனங்களிடமிருந்து தனிநபர்களுக்கு மாற்றியது சாதகமான நடவடிக்கையாகும். ஆனால் அதற்கான வரி விதிப்பு தனிநபர்களின் மீது திணிக்கப்படுகிறது. வரவு செலவு திட்டமானது பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் வகையில் வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அரசுக்கு முக்கிய சவாலாக இருந்தன.

சிக்கலான வரி விதிப்பு முறை

சிக்கலான வரி விதிப்பு முறை

வருமான வரி குறைக்கப்படும் என சாமானிய மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புதிய வரி முறையை பின்பற்றுபவர்களுக்கு புதிய வரிச் சலுகை அளிக்கப்படாது என நிர்மலா தெரிவித்துள்ளார். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரி முறையை எளிமைப்படுத்துவதற்காக கடந்த பல ஆண்டுகளாக வருமான வரி சட்டத்தில் உள்ள அனைத்து விலக்குகளை நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்துள்ளார். வருமான வரி சட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விலக்குகளில் 70ஐ நீக்கப்பட்டுள்ளன. இதுவும் பங்கு சந்தை சரிய காரணமாக சொல்லப்படுகிறது.

English summary
Here are the reasons for Why the Mumbai Stock Exchange fell off on budget after 11 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X