நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததும்.. ஷேக் ஹசீனா இந்தியாவை தேர்வு செய்தது ஏன்? காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, எந்த தகவலையும் தெரிவிக்காமல் ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கு வந்தார். ஷேக் ஹசீனா உடனடியாக இந்தியாவுக்கு வர முடிவு செய்ததற்கான காரணங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தன. வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர்கள் போராட்டங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Bangladesh Sheikh Hasina delhi

வங்கதேசம் வன்முறை: இந்தப் போராட்டத்தை ஷேக் ஹசீனா அரசால் முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் ராணுவம் தலையிட்டது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவ தளபதி கெடு விதித்ததால் அவர் தமது பதவியில் இருந்து விலகினார். மேலும் போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் டாக்கா இல்லத்தை முற்றுகையிட்டு சூறையாடத் தொடங்கினர்.

இதனால் வேறு வழியே இல்லாமல் உயிருக்கு அஞ்சி வங்கதேசத்தை விட்டு சகோதரி ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார். வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் தப்பிய நிலையில், அவர்களது விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது.. உபி மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் இந்திய விமானப்படை விமானம் தளத்தில் தரையிறங்கியது.

இந்தியாவை தேர்வு செய்ய காரணம்: அவரது விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று இரவு இந்தியாவில் தஞ்சம் அடைந்துவிட்டு நாளை லண்டன் செல்லலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. வங்கதேசத்தை விட்டு வெளியேறியதும் ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு வர முடிவு செய்ததற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் வருமாறு:-

* கடந்த சில ஆண்டுகளாகவே ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வருகிறார். பல வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அந்த மாநிலங்களில் பயங்கரவாத சவால்கள் உள்ளன. எனவே, வங்கதேசத்தில் நட்புறவுடன் இருப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இந்தியாவுக்கும் உள்ளது.

விட்டு கொடுக்காமல்: * ஷேக் ஹசீனா தனது ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கராவத குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளர். இதனால், டெல்லியில் அவருக்கு நற்பெயரும் கிடைத்தது. அதேபோல, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை எளிதாக கொண்டு செல்ல வசதியாக டிரன்ஸ்சிஸ்ட் உரிமையும் வழங்கினார்.

* ஷேக் ஹசீனா முதல் முறை அதிகாரகத்திற்கு வந்ததில் இருந்தே, இந்தியாவுடன் மிக நெருக்கமான நட்புறவை கடைப்பிடித்து வருகிறார். தனது பதவி காலத்தில் ஒருபோதும் இந்தியாவை விட்டுக் கொடுக்காமல் ஆதரவுடனே செயல்பட்டு வந்தார்.

வர்த்தக கூட்டாளி: * கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா வந்த போது கூட, 1971 சுதந்திர போரில் தங்கள் நாட்டிற்கு இந்தியா எந்த அளவுக்கு உதவி செய்தது என்பதை நினைவுகூர்ந்து பேசினார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனா நெருக்கமான நட்புறவை கடைபிடித்ததும், இந்தியாவின் ஆதரவு அவருக்கு இருந்ததும் வங்க தேச எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்தியா வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்க கூடாது என விமர்சிக்கப்படது.

* தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் வங்கதேசம் உள்ளது. ஆசியாவில் வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

இப்படி வர்த்தக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா மிக நெருக்கமான நட்பு நாடாக உள்ளது. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறியதும் இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+