மொட்டை தலை.. காவி கெட்டப்பில் போலீஸிடம் பிடிபட்ட சிவசங்கர் பாபா!.. அடையாளத்தை மறைக்க முயற்சி?
டெல்லி: உத்தரகாண்டில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க தனிப்படை சென்றதை அடுத்து அங்கிருந்து தப்பிய பாபா, காசியாபாத்தில் மொட்டை தலையுடன் போலீஸார் கைது செய்துள்ளனர். தேடுதல் வேட்டையில் அடையாளத்தை மறைக்க மொட்டை அடித்திருந்தாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே ராமராஜ்ஜியம் என்ற பகுதியில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
முன்னாள் மாணவிகள் ஆதாரத்துடன் சமர்ப்பித்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தப்பியோட்டம்
இந்த நிலையில் சிவசங்கர் பாபா தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் உத்தரகாண்டில் டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாபா தரப்பினர் அதற்கான சான்றுகளையும் புகைப்படங்களையும் போலீஸுக்கு சமர்ப்பித்தனர்.

வெளிநாடு
இந்தநிலையில் டேராடூனில் உள்ள பாபாவை நேரடியாக விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் அங்கு விரைந்தனர். மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் வருவது தெரிந்து டேராடூனில் இருந்து தப்பியுள்ளார் சிவசங்கர் பாபா.

காசியாபாத்
இந்த நிலையில் அவர் டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லை அருகே காசியாபாத்தில் போலீஸாரால் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டார். அவர் அப்போது மஞ்சள் நிறத்தில் சட்டையும் காவி வேட்டியும் அணிந்திருந்தார். மேலும் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

வெளிநாடு
திடீரென பாபா ஏன் மொட்டை அடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை போலீஸார் அடையாளம் கண்டுக் கொள்ளாமல் இருக்க அவ்வாறு செய்தாரா. இல்லை வெளிநாடு தப்பி செல்லும் திட்டத்தில் அவர் தன் தலையை மொட்டை அடித்தாரா என தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications