மனித இனமே அழியும் அபாயம்! விந்தணு எண்ணிக்கை ரொம்பவே மோசம்! இந்திய ஆண்களின் நிலை சொல்லவே வேண்டாம்
டெல்லி: உலகெங்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ள பிரச்சினை ஒன்று குறித்து தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் சில பகீர் முடிவுகள் தெரிய வந்து உள்ளது.
அறிவியல் வளர்ச்சி, மருத்துவம் உட்பட பல்வேறு காரணங்களால் உலக மக்கள் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் சராசரி ஆயுளும் அதிகரித்து உள்ளது.
மக்கள் தினசரி பிறக்கும் விகிதம் என்பது உயிரிழக்கும் விகிதத்தை விடக் குறைவாக உள்ளதால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது. சமீபத்தில் தான் உலக மக்கள்தொகை 800 பில்லியனை எட்டியது.

பிரச்சினை
அதேநேரம் உலகெங்கும் மக்கள்தொகை சீராக இருப்பது இல்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட டாப் இரண்டு நாடுகளாகச் சீனாவும், இந்தியாவும் உள்ளது. இந்தியா இப்போது இரண்டாம் இடத்தில் இருந்தாலும் கூட, மிக விரைவில் அது சீனாவை முந்தும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் உலகில் அனைத்து நாடுகளுக்கும் இதை நிலை என்று சொல்ல முடியாது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் மக்கள் தொகை பெரியளவில் உயர்வதில்லை. குறிப்பாக ஜப்பானில் வயதானவர்களின் எண்ணிக்கை இளைஞர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து உள்ளது.

கருவுறுதல் மையங்கள்
இதனால், ஜப்பான் உட்பட பல நாடுகளில் அதிக குழந்தை பெற்றால் அதிக ஊக்கத்தொகை தருவதாகக் கூட அந்நாட்டு அரசுகள் அறிவித்து உள்ளன. இதற்கு மாறி வரும் வாழ்க்கை முறை தொடங்கி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்தியாவிலும் கூட இயற்கையாகக் கருவுறுதல் என்பதில் பல தம்பதிகள் சிக்கலை எதிர்கொண்டு உள்ளனர். இயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வுக்கே பலரும் மருத்துவமனைகளை நாட வேண்டி உள்ளது. நம்ம ஊர் முழுக்க நிறைந்து இருக்கும் கருவுறுதல் மையங்களே இதற்குச் சாட்சியாகும்.

ஆய்வு
கருவுறுதலில் பல்வேறு விஷயங்கள் முக்கியம் என்றாலும் கூட ஆண்களுக்கு இருக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை இதில் ரொம்பவே முக்கியமாகும். இது தொடர்பாகச் சர்வதேச அளவில் பலரும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், இந்தியா உட்பட உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் கடந்த பல ஆண்டுகளாகவே ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத் தகுந்த அளவுக்குச் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

விந்தணு எண்ணிக்கை
விந்தணு எண்ணிக்கை கருவுறுதலுக்கு மட்டும் முக்கியமில்லை. இவை ஆண்களின் ஆரோக்கியத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.. ஆண்களுக்கு இந்த விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், டெஸ்டிகுலர் புற்றுநோய், ஆயுட்காலம் குறையும் அபாயம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இப்போது விந்தணுக்கள் குறைவது என்பது நவீன சூழல் மற்றும் வாழ்க்கை முறையால் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கலைப் பிரதிபலிக்கிறது.. இவை இப்படியே தொடர்ந்தால் ஒரு காலத்தில் இவை மனித இனத்திற்கே சிக்கலாக மாறக்கூடும்.

வெகுவாக குறைவு
இப்போது ஆய்வாளர்கள் மொத்தம் 53 நாடுகளில் இருந்து பெற்ற தரவுகளை ஆய்வு செய்து உள்ளனர். அதுவும் கடந்த 7 ஆண்டுகளாக (2011-2018 வரை) விரிவான தரவுகளைப் பெற்று, இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். கடந்த காலங்களில் இது போல விந்தணு எண்ணிக்கையின் குறித்து ஆய்வுகள் பெரிதாக எதுவும் செய்யப்பட்டது இல்லை. இதில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் பகுதிகளில் முன்பு இருந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் செறிவு உடன் ஒப்பிடுகையில் இப்போது வெகுவாக குறைந்து உள்ளது.

இந்தியா
அதிலும் குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு, விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் செறிவு குறைவது வேகமெடுத்து உள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "இந்தியாவும் இதில் இருந்து விதிவிலக்கு இல்லை. இந்தியாவிலும் உலக நாடுகளைப் போலவே விந்தணு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 46 ஆண்டுகளில் விந்தணு எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.. அதிலும் சமீப காலங்களில் இது வேகமெடுத்து உள்ளது. இப்படி விந்தணு எண்ணிக்கை குறைய என்ன காரணம் என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்யவில்லை.

மனித இனத்திற்கே ஆபத்து
கருவில் இருக்கும் போதே இனப்பெருக்க மண்டல வளர்ச்சியில் ஏற்படும் இடையூறுகள் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நமது வாழ்க்கை முறை, கெமிக்கல் பயன்பாடு, உள்ளிட்டவையும் கூட கருவின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. நிலைமை சரி செய்ய நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இது மனித இனத்திற்கே ஆபத்தாக முடியலாம். ஆரோக்கியமான சூழலை மேம்படுத்தவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தைக் குறைக்க உடனடியாக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவுக்கும் அதே நிலை தான்
இந்தியாவுக்கு எனத் தனியாக இதுபோன்ற ஆய்வுகளை நடத்த வேண்டும். ஆனால், தற்போது உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கும் எனச் சொல்ல எந்தவொரு காரணமும் இல்லை. விந்தணு குறுவை என்பது ஆண்களின் கருவுறுதலை மட்டும் பாதிக்காது.. இவை ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் கூட தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். மேலும், டெஸ்டிகுலர் கேன்சர் போன்ற மிக மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

ஆண்கள்
ஆண்களின் விந்தணு செறிவு மற்றும் விந்தணு எண்ணிக்கை குறைவு என்பது ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக டெஸ்டிகுலர் கேன்சர், ஹார்மோன் சீர்குலைவு மற்றும் பிறப்புறுப்பு குறைபாடுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளன. பெண்களின் இனப்பெருக்க ஆண்கள் மட்டுமின்றி, பெண்களின் கருவுறுதல் செயல்பாடுகளும் கடந்த பல ஆண்டுகளாகவே பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளது" என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications