முதலில் வாஜ்பாய்! இப்போது மோடி! மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ல் தாக்கலாவது ஏன் தெரியுமா? சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் மத்திய பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Why Union Budget always tabled on February 1?

இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாகும். அதன்படி இந்த அரசின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலகாத் ஜோஷி இந்த தேதியை அறிவித்தார்.

அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி ஜனவரி 31ம் தேதி முதல் நாளில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதன்பிறகு மத்திய இடைக்கால பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமான வரிக்கான உச்சவரம்பு என்பது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் என உயர்த்தப்படுமா என பலரும் எதிர்பார்த்துள்ளனர். சரி இது இருக்கட்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுவது ஏன்? என்பது பற்றி நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?. இதற்கு முன்பு அதாவது 2017 ம் ஆண்டுக்கு முன்பு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தான் மத்திய பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் மத்திய பட்ஜெட் தேதி என்பது பிப்ரவரி 1ம் தேதியாக மாற்றப்பட்டது.

இது கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. முதல் முதலாக பிப்ரவரி 1ம் தேதி மறைந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு தொடர்ந்து மத்திய அரசு பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி சமர்ப்பித்து வருகிறது. அதாவது பிப்ரவரி மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்வது ஆங்கிலேயர்கள் பின்பற்றிய வழிமுறையாகும். இதனை பின்பற்றுவது என்பது காலனித்துவ ஆதிக்கத்தை தொடர்வது போல் இருக்கும் என மத்திய பாஜக அரசு நினைத்தது. இதனை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையின்படி மத்திய அரசு பிப்ரவரி இறுதி வாரத்துக்கு பதில் பிப்ரவரி 1ம் தேதியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கியது.

மேலும் பிப்ரவரி இறுதி வாரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது என்பது ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டில் புதிய கொள்கைகள், மாற்றங்களை அமல்படுத்துவதற்கு போதிய காலஅவகாசம் என்பது மத்திய அரசுக்கு இல்லாமல் இருந்தது. மாறாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அதில் வெளியாகும் கொள்கை ரீதியான முடிவுகளையம், மாற்றங்களை அடுத்த நிதியாண்டில் அமல்படுத்த போதிய காலஅவகாசம் என்பது கிடைக்கும் என மத்திய அரசு நினைத்து இந்த தேதியை மாற்றம் செய்ததாக அருண்ஜெட்லியே கூறியிருந்தார்.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடர்ச்சியாக ரயில்வேக்கு தனி பட்ஜெட் இருந்ததையும் அருண் ஜெட்லி ஒரே பட்ஜெட்டாக மாற்றி காலனித்துவ நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முன்னதாக இதற்கு முன்பு நாடாளுமன்ற பட்ஜெட் என்பது மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் ஆங்கிலேயர்கள் வகுத்து கொடுத்த வகையில் தான் நடந்து வந்தது. இந்த நேரமும் மத்திய பாஜக ஆட்சியில் தான் மாற்றப்பட்டது. அதாவது 1999ல் மத்தியில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா மாலை 5 மணிக்கு பதில் பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக மத்திய பட்ஜெட் என்பது நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு தான் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+