உருமாறிய கொரோனாவையும் அழிக்கும் கோவாக்சின்.. ஆனாலும் WHO-இன் ஒப்புதல் தாமதம் ஆவது ஏன்? முழு விவரம்
டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அனுமதி அளிக்காதது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் இந்த கால இடைவெளி வழக்கமான ஒன்றுதான்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும், தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
அதேநேரம் கடந்த சில வாரங்களாக கோவாக்சின் தடுப்பூசி பற்றிய வெளியாகியுள்ள சில செய்திகளும் சற்றே கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது உலக சுகாதார அமைப்பு இதுவரை பைசர், மாடர்னா, கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், தற்போது வரை கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல் வெளியானது.

கோவாக்சின் தடுப்பூசி
உலக சுகாதார அமைப்பு ஏன் இதுவரை கோவாக்சினுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறித்துப் பார்க்கும் முன் கோவாக்சின் தடுப்பூசி பற்றி முக்கியமான சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி தான் கோவாக்சின். இது அதிகம் நிரூபிக்கப்பட்ட Inactivated வைரசை கொண்ட தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசியாகும். அதாவது, இது செயலிழக்கப்பட்ட கொரோனா வைரசை கொண்டிருக்கும்.

கோவ்காசின் தடுப்பாற்றல்
கோவாக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களை 4-6 வாரங்களில் செலுத்தப்பட வேண்டும். இது மூன்றாம்கட்ட தடுப்பூசி சோதனைகளில் 78% வரை பலன் அளிப்பதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் பலன் அளிப்பதும் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

வரும் மாதங்களில் ஒப்புதல்
இருந்தாலும்கூட, இதுவரை கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அடுத்து வரும் மாதங்களில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் என்றும் அந்நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் சர்வதேச பிரிவின் தலைவர் டாக்டர் ரேச்ஸ் எல்லா தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் வேண்டி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இருப்பினும், கோவாக்சின் தடுப்பூசி குறித்து கூடுதலாக சில தகவல்கள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு பதிலளித்துள்ளது. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ள தரவுகளில் 90% தரவுகளை அளித்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. மீதமிருக்கும் தரவுகளும் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் குறிப்பிட்டுள்ளது.

சில வாரங்கள்
கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை 11 நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஏழு நாடுகளைச் சேர்ந்த 11 நிறுவனங்கள் கோவாக்சின் தடுப்பூசியை தங்கள் நாடுகளில் உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிலும் கோவாக்சின் தடுப்பூசி ஒப்புதல் கிடைக்க இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதனால் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் சில வாரங்களில் அல்லது அதிகபட்சமாக சில மாதங்களில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications