நிலைமை மோசமாகுது.. பாஜகவிற்கு போன மெசேஜ்.. 220 இடங்களை தூக்கும் எதிர்க்கட்சிகள்.. இதை பாருங்க!
டெல்லி: முதல் கட்ட தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. நிலைமை வேகமாக மாறி வருகிறது. இந்தியா கூட்டணி சுலபமாக 220+ இடங்களில் வெல்லும் என்பதே தற்போதைய சூழ்நிலை, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் தொடங்கும் முன் பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்தது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வந்தனர்.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
பேட்டி: இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியா கூட்டணியில் லோக்கல் அளவில் சில கசப்புகள் உள்ளன. ஆனால் அந்த கசப்புகள் மேல் இடத்தில் இல்லை. கீழே தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அல்லது அவர்களின் எக்சிட் போல் ரிப்போர்ட் தெரிவித்து இருக்கலாம்.
அதேபோல்தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவிலும் பாஜகவிற்கு எதிராக நிலைமை மாறிக்கொண்டு உள்ளது. சிம்பிளாக சொல்கிறேன்.. மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.
இங்கே 230 இடங்கள் உள்ளன. இங்கே 100-110 எடுத்தாலே இந்தியா கூட்டணிக்கு பலமாக இருக்கும்., மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளாவில் பாஜக அல்லாத கட்சிகள்தான் வலிமையாக உள்ளன. இங்கே மோடி வேண்டாம் என்று சொல்பவர்கள் வருவார்கள். அதனால் இங்கே இவர்கள் 110 இடங்கள் வரை பாஜகவிற்கு எதிராக திரும்பும். போன்ற முறை போல உத்தர பிரதேசம் தொடங்கி இமாச்சல பிரதேசம் வரை பல இடங்களில் காங்கிரஸ் வளர்ந்து உள்ளது.
என் கணக்குப்படி நம்பர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்தியா கூட்டணிக்கு நிலைமை சாதகமாக மாற தொடங்கி உள்ளது. கடந்த முறை போல இல்லை. தெற்கில் போன்ற முறை 29 இடங்களை பாஜக வென்றது. இந்த முறை அப்படி வெல்ல முடியாது. அதில் பாதி கிடைத்தால் கூட பாஜகவிற்கு அதிசயம்தான். 272 இடங்களை எல்லாம் பாஜக எடுக்க முடியாது.
தெற்கில் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை இல்லை. முதல் கட்ட தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. நிலைமை வேகமாக மாறி வருகிறது. இந்தியா கூட்டணி சுலபமாக 220+ இடங்களில் வெல்லும் என்பதே தற்போதைய சூழ்நிலை , என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications