ஜி20 மாநாட்டை புறக்கணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்! காரணம் என்ன? அமெரிக்க அதிகாரி சொன்ன பதில்
டெல்லி: டெல்லியில் இந்தியா தலைமையில் ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடக்கிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காத நிலையில் அதுபற்றி அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
ஜி20 அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்பட மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநாடு என்பது ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடுகளின் தலைமையில் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது.

அதன்படி டெல்லியில் ஜி20 மாநாடு இன்று தொடங்கி நாளை வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசா உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இதுதவிர உலக வங்கி தலைவர், சர்வதேச நாணய நிதியம், ஐநா சபை உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்கவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் நடக்கும் உச்சி மாநாடுகளில் விளாடிமிர் புதின் பங்கேற்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். அந்த வகையில் அவர் இந்தியாவின் ஜி20 மாநாட்டையும் புறக்கணித்துள்ளார். விளாடிமிர் புதினுக்கு பதில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் சீன பிரதமர் லீ கியாங் பங்கேற்றுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவின் ஜி20 மாநாட்டை புறக்கணித்தற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தியாவுடன் இருக்கும் எல்லை மோதலை ஒரு காரணமாக கூறும் அதேவேளையில் சீனாவில் ஜி ஜின்பிங்கின் செயல்பாட்டுக்கு தற்போது சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இந்தியாவின் ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் ஜி20 மாநாட்டில் பங்கேற்காமல் ஜி ஜின்பிங் புறக்கணித்ததன் பின்னணி குறித்து அமெரிக்க அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக டெல்லியில் அமெரிக்க பாதுகாப்பு துறையின் துணை ஆலோசகர் ஜான் பைனர் கூறுகையில், ‛‛ஒரு உலகளாவிய அமைப்பின் நிகழ்ச்சியில் சீனாவின் அதிபர் பங்கேற்கிறாரா? பங்கேற்க மாட்டாரா? என்பது பற்றி அந்த நாடு தான் விளக்க வேண்டும். அதுபற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. சீன அரசின் நடவடிக்கை பற்றி பேச அமெரிக்கா பல முறை அழைக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா அப்படி எதையும் செய்வது இல்லை'' என்றார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications