3 மாநிலங்களில் வெற்றி+ ராமர் கோவில் கும்பாபிஷேகம்!சூட்டோடு சூடாக லோக்சபா தேர்தல்! மோடி பக்கா பிளான்?
டெல்லி: 4 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் முன்கூட்டியே லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

இது லோக்சபா தேர்தலுக்கான களத்தை அமைக்கும் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதில். மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வருகிறது.
டிரெண்ட் என்ன: இதில் தற்போது வரை இருக்கும் டிரெண்டை வைத்துப் பார்க்கும் போது பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. 4இல் 3 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் சூழல் இப்போது நிலவி வருகிறது.
இந்தியாவின் ஹார்ட் லேண்டாக அறியப்படும் மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே தற்போதைய நிலவரப்படி பாஜக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 70 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பாஜக மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.
மொத்தமாக காலி: அதேபோல மற்றொரு முக்கிய வட மாநிலமான ராஜஸ்தானிலும் நல்ல வெற்றி பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. அங்கே மொத்தம் இருக்கும் 200 தொகுதியில் 199க்கு தேர்தல் நடந்தது. அதில் 107 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 76 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் சுமார் 16 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தானில் கடும் போட்டி இருக்கும் என எக்ஸிட் போல்களில் கூறப்பட்ட போதிலும், பாஜக எளிதாகத் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது.
அதிர்ச்சி: சத்தீஸ்கரில் தான் காங்கிரஸுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. நேற்று வரை வந்த அனைத்து எக்ஸிட் போல்களும் அங்கே காங்கிரஸ் வெல்லவே வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இன்று ஆரம்பக்கட்ட டிரெண்டிங் அதையே தான் காட்டியது. ஆனால், அதன் பிறகு அங்கே நிலை மொத்தமாக மாறியது. 90இல் 59 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 29இல் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், அங்கே பாஜக வலுவாக இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வெற்றி பாஜகவுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 2 மாநிலங்களில் வெல்வதே கடினம் என்ற சூழல் இருந்த நிலையில், 3 மாநிலங்களில் அதிரடி வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இது தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இது வடமாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கை நிச்சயம் அதிகரிக்கும்.
ராமர் கோயில்: அடுத்து ஜன. மாதம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவும் நடக்க உள்ளது. பாஜக பல ஆண்டுகளாக முன்வைக்கும் விஷயமாக இது இருந்து வருகிறது. ராமர் கோயில் அங்கே கட்டி திறக்கப்படுவது பாஜகவின் இமேஜை பல மடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் பாஜக முன்கூட்டியே லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
பிளான் இதுதான்: அடுத்தாண்டு மே மாதம் தான் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த 3 மாநில தேர்தல் வெற்றி கொடுத்த உற்சாகம், ராமர் கோயில் கணக்கு ஆகியவற்றால் முன்கூட்டியே பாஜக தேர்தலை எதிர்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications