அடுத்தடுத்து 3 துப்பாக்கி சூடு.. கடும் அச்சத்தில் மக்கள்.. டெல்லி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதா?
டெல்லியில் அடுத்தடுத்து நடந்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் காரணமாக அங்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் தள்ளிபோகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: டெல்லியில் அடுத்தடுத்து நடந்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் காரணமாக அங்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் தள்ளிபோகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது.70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் 4 நாட்களில் மூன்று முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
முதலில் டெல்லியில், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் வெளியில் துப்பாக்கி சூடு நடந்தது. அதன்பின் ஷாகீன் பாக் போராட்ட களம் அருகே துப்பாக்கி சூடு நடந்தது. அதன்பின் நேற்று இரவு மீண்டும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு நடந்தது.

டெல்லி தேர்தல்
டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இப்படி துப்பாக்கி சூடுகள் நடப்பது அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. சமீப காலமாக, தேர்தலுக்கு முன் இந்தியாவில் கலவரங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் தற்போது டெல்லியில் நடக்கும் விஷயம் மிக மோசமானது. எப்போது எங்கே யார் சுடுவார்கள் என்று தெரியாது. இளைஞர்கள் யார், எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்றும் தெரியாது.

தீவிரவாத தாக்குதல்
டெல்லியில் நடப்பதும் ஒரு வகையில் தீவிரவாத தாக்குதலுக்கு இணையானதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறுப்பு தீவிரவாதம் எனப்படும் hate terrorism வகை தாக்குதல்கள் ஆகும் இது. இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கும் போது தேர்தல் நடத்துவதும் மிகவும் கடினமான விஷயம். அதிலும் முக்கியமான தலைவர்கள் பலர் வாக்களிக்கும் டெல்லி போன்ற யூனியன் பிரதேசத்தில், தேர்தல் நடத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இதை எப்படி தேர்தல் ஆணையம் செய்ய போகிறது என்று தெரியவில்லை.

பாதுகாப்பு எப்படி
டெல்லியில் இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸ் கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் கட்டுப்பாடுகளையும் மீறி, இப்படி எல்லாம் துப்பாக்கி சூடுகள் நடக்கிறது. போலீஸின் மெத்தனமான போக்குதான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். இதனால் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் என்ன
இதனால் தற்போது டெல்லியில் தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இப்படி வரிசையாக சம்பவங்கள் நடக்கும் போது தேர்தல் நிறுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்துவது குறித்து முடிவு எதையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் நினைக்காது. கூடுதல் பாதுகாப்போடு தேர்தலை நடத்தவே திட்டமிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி!











Click it and Unblock the Notifications