மோடி ஓய்வு பெற்றால் புதிய பிரதமர் மகாராஷ்டிராவின் நிதின் கட்காரி? சிவசேனா சஞ்சய் ராவத் பரபர தகவல்
டெல்லி: நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெற்றால் புதிய பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த நிதின் கட்காரிதான் நாட்டின் அடுத்த பிரதமராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தேர்வு செய்யப்படக் கூடும் என்பதையே சஞ்சய் ராவத் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது; பாஜகவின் நடைமுறைகளின்படி 75 வயது நிறைவடைந்த ஒருவர் எந்த ஒரு பதவியும் வகிக்க முடியாது; ஆகையால் பிரதமர் மோடி தாம் பதவியில் இருந்து விலகும் ஓய்வு முடிவை அறிவிக்கவே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்று சென்றார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள், புதிய பிரதமர் யார் என்பது குறித்து ரகசிய ஆலோசனை நடத்தினர். மோடிக்குப் பின்னர் புதிய பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார் சஞ்சய் ராவத்.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியே 2029-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர் ஏன சஞ்சய் ராவத் கூறியிருப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளது. நாட்டின் பிரதமர் பதவிக்கு ஏற்கனவே தம்மை தேர்வு செய்ய விரும்பினார்கள்; ஆனால் நான் மறுத்துவிட்டேன் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிக நெருக்கமான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மோடி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்ல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரியே புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்கிற விவாதம் களைகட்டி இருக்கிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications