2019ல் அம்மா ஆசையா தச்சுக் கொடுத்த சிவப்பு கலர் பட்ஜெட் பை.. இம்முறையும் கொண்டு வருவாரா நிர்மலா?
Recommended Video
டெல்லி: பட்ஜெட் என்றாலே அது சூட்கேஸில் கொண்டு வருவதுதான் என்ற மரபை கடந்த நிதியாண்டில் மாற்றிவிட்டு தன் அம்மா தைத்து கொடுத்த சிகப்பு நிற பையில் பட்ஜெட் உரைகளை கொண்டு வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த முறையும் அதே பையுடன் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பட்ஜெட் அறிக்கைகள் எப்போதும் சூட்கேஸில்தான் கொண்டு செல்வது வழக்கம். இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபாகும். இந்த மரபை கடந்த 1860-ஆம் ஆண்டு பிரிட்டன் அரசவையில் வில்லியம் கிளாட்ஸ்டோன் அறிமுகம் செய்தார்.

பட்ஜெட் தாக்கல்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததை அடுத்து கடந்த ஆண்டு வரை , இன்னும் ஏன் கடந்த ஆண்டு வெளியான இடைக்கால பட்ஜெட் வரை அதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்தியில் 2-ஆவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக கடந்த ஜூலை மாதம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

பழைய பழக்கம்
அப்போது நிதி அமைச்சகத்திலிருந்து வெளியே வந்த நிர்மலா சீதாராமனின் கையில் இருந்ததை பார்த்து செய்தியாளர்களுக்கு ஆச்சரியம். ஏனெனில் வழக்கமாக நிதி அமைச்சரின் கையில் பட்ஜெட் நாளன்று இருக்கும் பெட்டிக்கு பதிலாக சிகப்பு நிறத்தினாலான பட்ஜெட் பை இருந்தது. இந்த பையை கொண்டு வந்ததன் மூலம் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய பழக்கத்தை மாற்றினார் நிர்மலா.

பூஜை
இந்த பை குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில் சூட்கேஸ் எடுத்துச் செல்லும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் பட்ஜெட் உறையை தன்னுடைய அம்மா, அவரது கைகளால் தைத்து கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அந்த பையை மும்பை சித்தி விநாயகர் கோயில் மற்றும் மகாலட்சுமி கோயிலில் வைத்து பூஜை செய்து கொடுத்தார்.

அரசு முத்திரை
எனினும் அந்த பை நம் வீட்டு பை போல் இல்லாமல் இருக்கவும் அரசினுடையது என்ற அடையாளம் காணவும் அதில் அசோக சக்கரத்தை பதித்தேன் என தெரிவித்தார். இந்த நிலையில் நாளை 2020- 2021-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டை போல் சிகப்பு பையையே நிர்மலா பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications