ராமர் கோவில் திறந்ததும்.. மோடிக்கு போன நல்ல செய்தி! ஜாக்பாட்.. 2024ல் மீண்டும் ஸ்வீப் செய்கிறதா பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் திறந்த சில நாட்களில் பாஜகவிற்கு நல்ல செய்தியாக வர தொடங்கி உள்ளது. அதிலும் சமீபத்தில் வெளியான நல்ல செய்தி ஒன்று தேசிய அளவில் பாஜகவை நிமிர்ந்து உட்கார செய்துள்ளது.

கடந்த 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் மோடி முன்னிலையில் நடந்தது. தற்போது மக்கள் வழிபாட்டிற்கு இந்த கோவில் திறக்கப்பட்டு உள்ளது.

 Will Nithish Kumar return to NDA alliance help BJP and Modi to win big?

இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு: இந்த நிலையில் விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த சூட்டோடு சூடாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

நல்ல செய்தி: அயோத்தியில் ராமர் கோவில் திறந்த சில நாட்களில் பாஜகவிற்கு நல்ல செய்தியாக வர தொடங்கி உள்ளது. அதிலும் சமீபத்தில் வெளியான நல்ல செய்தி ஒன்று தேசிய அளவில் பாஜகவை நிமிர்ந்து உட்கார செய்துள்ளது.

இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அக்கட்சி முறிக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வெளியேறுவார். அதோடு பீகாரில் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சண்டை: சமீபத்தில்தான் திமுக உடன் நிதிஷ் குமார் மோதினார். இந்தியா கூட்டணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியில் நிதிஷ்குமார் பேசிய போது, இந்தி தெரியாத தலைவர்கள் இங்கு இருப்பதால், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று டி.ஆர்.பாலு சொல்லிய நிலையில், இந்தி தேசிய மொழி ; அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபமாக நிதிஷ் சொல்ல, அது சர்ச்சையானது.

இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கவில்லை என்றதும்.. அவர் கூட்டணியை உடைக்க இப்படி எல்லாம் பேசுகிறார் என்று செய்திகள் வந்தன.

இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் மட்டுமின்றி மமதா பானர்ஜியும் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா கூட்டணி அப்படி பொதுவாக ஒரு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் அவரும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கூட்டணி: இதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் உடன் இருக்க மனமின்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த தொடர் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பிளவுகள் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவிற்கு சாதகமாக திரும்பும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.

2024ல் மீண்டும் பாஜக ஸ்வீப் செய்வதற்கு சாதகமாக நிதிஷ் குமார் தற்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+