Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் ஆப்பரேசன் சவுத் இந்தியா! ‘எடப்பாடியை' விட ‘ஓபிஎஸ்’ ஏன் ஓகே? மாறி வீசும் தாமரை காற்று

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது பாஜக தலைமையின் நகர்வுகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதையே காட்டுகின்றன. எடப்பாடியை விட ஓ.பன்னீர்செல்வம் எந்த அளவுக்கு பாஜகவுக்கு சாதகமாக இருப்பார் என்பதை பார்ப்போம்.

Recommended Video

    EPS, OPS : யாரை சந்திக்க போகிறார் மோடி?

    ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

    ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

    பொதுச்செயலாளர் இபிஎஸ்

    பொதுச்செயலாளர் இபிஎஸ்

    அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

    மாறி வீசும் காற்று

    மாறி வீசும் காற்று

    தொடர்து இரு தரப்பினரும் போட்டிபோட்டு நிர்வாகிகளை நீக்கிக்கொண்டிருந்தாலும் அலுவக வழக்கு, வங்கிக் கணக்கு விவகாரம் போன்றவற்றில் எடப்பாடி கையே ஓங்கி இருந்தது. இந்த நிலையில், மேற்கு பக்கம் வீசிய டெல்லி காற்று தற்போது தெற்கு திசையில் வீசத் தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தொடர்புடைய இடங்களில் நடக்கும் அதிரடி சோதனைகள், வேகமாக நகரும் வழக்குகள் இதை காட்டுகின்றன.

    திருப்பி அனுப்பப்பட்ட எடப்பாடி

    திருப்பி அனுப்பப்பட்ட எடப்பாடி

    அண்மையில் அண்ணாமலையுடன் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவுக்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று பேசப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்றுவிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும், இடைபட்ட நேரத்தில் அதிமுக உள்கட்சி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் விவாதிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த சூழலில் பிரதமரை சந்திக்காமல் அவர் சென்னைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

    ஆப்பரேசன் சவுத் இந்தியா

    ஆப்பரேசன் சவுத் இந்தியா

    பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது 2 வது பெரிய கட்சியாக மாற்று சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஐதராபாத் செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா சொன்னதைபோல தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் ஆப்பரேசன் சவுத் இந்தியா திட்டத்தை செயல்படுத்த துரிதமாக காய் நகர்த்தி வருகிறது பாஜக. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவதை தங்களின் ஆப்பரேசன் தென் இந்தியா திட்டத்துக்கு சிக்கலாகவே பார்க்கிறது.

    எடப்பாடியால் என்ன சிக்கல்?

    எடப்பாடியால் என்ன சிக்கல்?

    எடப்பாடி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் 2021 தேர்தல் முடிந்தவுடன் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் என்று கூறினார். கடந்த மே மாதம் எடப்பாடி ஆதரவாளரான பொன்னையன் தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்காக போராடாத பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசினார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க, எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு போன்ற ஒரு தரப்பினரே பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இருந்து நீக்கியது. எனவே எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றே பாஜக கருதுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஓகே

    ஓ.பன்னீர்செல்வம் ஓகே

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பொறுத்தவரை விட்டுக்கொடுத்து செல்பவர் என்ற பெயரை டெல்லிவரை பெற்று இருக்கிறார். அதுபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டதாக பேசியது, பாஜக ஆதரவாளர் குருமூர்த்தி ஆலோசனைபடி தர்மயுத்தத்தில் ஈடுபட்டது, தர்மயுத்தத்தின்போது பாஜக அனுதாபிகளான மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டது என தாமரை தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் ஓபிஎஸ். அவரது மகன் ரவீந்திரநாத்தும் தனது லெட்டர் பேடிலேயே மோடியின் படத்தை சேர்த்தது, பாஜகவினருக்கு இணையாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசை புகழ்ந்து பேசுவது என ஸ்கோர் செய்தார். எனவே எடப்பாடி தரப்பை ஒப்பிடுகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பரவாயில்லை என்பதே பாஜகவின் நிலைபாடாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+