"டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர துணை நிலை ஆளுநர் திட்டமிடுவதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.
மதுபான கொள்கை விவகாரத்தில் சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று ஆம் ஆத்மி அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா, டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்காது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. டெல்லியில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வினய் குமார் சக்சேனா இந்த கருத்துகளைக் கூறினார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி?: டெல்லியில் தற்போது இருக்கும் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அரசு சிறையிலிருந்து இயங்காது. அப்படி நடக்கவும் முடியாது என்று டெல்லி மக்களுக்கு என்னால் உறுதியளிக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
சரமாரி கேள்வி: இதற்கு ஆம் ஆத்மி கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. இது தொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர் தனது பதவியை இழப்பார். டெல்லி துணை நிலை ஆளுநர் எந்த சட்டத்தின்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை, நாட்டின் சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது. உங்களுக்கு அவையில் பெரும்பான்மை இல்லை என்றால் தான் உங்களால் முதல்வராகத் தொடர முடியாது.
அப்படியிருக்கும் போது டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எப்படிக் கொண்டு வர முடியும். நமது நாட்டில் சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது.. வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 356வது சட்டப்பிரிவு விவகாரம் பல முறை உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
எந்தவொரு மாநிலத்தில் ஆட்சிக்கு வேறு வழியில்லை என்றால் மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். இப்போது டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தானே தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.
மதுபான ஊழல் விவகாரம்: டெல்லி அரசு மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார், கடந்த 2021 நவம்பரில் டெல்லியில் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அது தனியாருக்குச் சாதகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், ஒன்பது மாதங்களில் அந்த கொள்கை திரும்பப் பெறப்பட்டது. இது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
அதன்படி அமலாக்கத் துறை நடத்திய விசாரணையிலேயே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகத் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் கெஜ்ரிவால், சிறையில் இருந்தாலும் தொடர்ந்து முதல்வராகத் தொடர்வேன் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், சிறையில் இருந்து அவர் தொடர்ச்சியாக உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.
முதல்முறை: இதுநாள் வரை முதல்வராக இருக்கும் நபர் சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதிய நபருக்கு அந்த பொறுப்பைக் கொடுப்பார். ஹரியானா முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யும் சூழல் ஏற்பட்டது. அப்போதும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டே சிறைக்குச் சென்றார். ஆனால், கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் முதல்வராகச் செயல்படுவேன் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications