எம்ஜிஆர் போலை படுத்துக்கொண்டே வெல்வாரா மம்தா.. ஒட்டுமொத்த தேர்தலையும் புரட்டிப்போடும் ஒற்றை வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவமனையில் இருந்தவாறே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ஒற்றை வீடியோ, அங்கு தேர்தல் முடிவுகளையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த இரண்டு முறை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளார்.

அதேநேரம் எதிர்ப்பு வாக்குகளையும் இந்துக்களின் வாக்குகளையும் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்கி வேலை செய்துவருகிறது.

பாஜக திட்டம்

பாஜக திட்டம்

மேலும், அக்கட்சியுள்ள முக்கிய தலைவர்கள் பலரையும் பாஜக தன்வசம் இழுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன், மம்தாவின் வலது கரமாக இருந்த இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் ஐக்கியமானார். இவருக்கு மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் வலுவான செல்வாக்கு உள்ளதால் வாக்கு வங்கி உயரக்கூடும் என பாஜக எதிர்பார்க்கிறது.

நந்திகிராம் தொகுதி

நந்திகிராம் தொகுதி

அவரை முதல்வர் வேட்பாளாராக அறிவிக்க பாஜக தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும், கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்ற நந்திகிராம் தொகுதியிலிருந்து அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர். மம்தா பானர்ஜிக்கு நந்திகிராம் தொகுதியில் போட்டியிடத் தைரியம் உள்ளதா என ரீதியில் பல பாஜக தலைவர்கள் சவால் விடுத்தனர்.

மம்தா மீது தாக்குதல்

மம்தா மீது தாக்குதல்

இந்த சவாலை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா முடிவு செய்தார். நேற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் மாலை பிருளியா பஜார் என்ற பகுதியில் மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தன் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் முதலில் வெளியாகி வைரலானது.

பாஜக புகார்

பாஜக புகார்

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மம்தாவின் தாக்குதல் குறித்து சந்தேகத்தை எழுப்பினர். ம்மதா ஆதாரமற்ற பொய்களைச் சுமத்துவதாகவும் தேர்தல் லாபத்திற்காகப் பொய்களைக் கூறுகிறார் என்றும் பாஜக விமர்சித்தது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் பாஜக அறிவித்தது. அதேபோல திரிணாமுல் காங்கிரசும் இது தொடர்பாகப் புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியது.

மம்தா வெளியிட்ட வீடியோ

மம்தா வெளியிட்ட வீடியோ

இந்நிலையில், இன்று மதியம் மம்தா பானர்ஜி வெளியிட்ட ஒற்றை வீடியோ ஒட்டுமொத்த ட்விட்டரையே ஆக்கிரமித்துவிட்டது. அதில் அவர், எனக்கு கை, கால், தசைநார்களில் காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு நெஞ்சிலும் வலி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் 2-3 நாட்களில் நான் மருத்துவமனையிலிருந்து திரும்பிவிடுவேன்.சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் எனக்கு உங்கள் ஆதரவும் உதவியும் தேவைப்படும்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

கேம் சேஞ்சர்

கேம் சேஞ்சர்

அதிருப்தி வாக்குகளும், இந்துக்களின் வாக்குகளும் இந்த முறை பாஜகவுக்குச் செல்லும் என்று பலரும் கூறினார். இருப்பினும், மம்தா வெளியிட்டுள்ள இந்த ஒற்றை வீடியோ கேம் சேஞ்ராக மாறியுள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கும் மம்தாவை இப்படி மிகவும் சோர்வாக, களையிழந்த நிலையில் பார்க்க முடியவில்லை என மேற்கு வங்க மக்கள் ட்விட்டரில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர்- மம்தா

எம்ஜிஆர்- மம்தா

1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில நாட்கள் முன், அப்போது திமுகவிலிருந்த எம்ஜிஆர் பிரபல நடிகர் எம்ஆர் ராதாவால் சுடப்பட்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பெற்று வருவது போல வெளியான ஒற்றை புகைப்படம் அந்த தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தது. திமுக முதல்முதலில் ஆட்சி அமைக்கவும் அந்த ஒற்றை புகைப்படம் பேருதவியாக இருந்தது. அதேபோல இந்த ஒற்றை வீடியோ நடைபெறவிருக்கும் மேற்கு வங்க தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+