கடைசி நேரத்தில் பரபரப்பு.. 4 மணி நேரம் இழுத்தடித்து அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்த பாக்.!
Recommended Video

டெல்லி: இந்திய அதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் மாலை 5.20 மணிக்கு ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இரவு 9.20 மணிவரை பாகிஸ்தான் வேண்டுமென்றே இழுத்தடித்து அதன்பிறகே, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், இன்று மாலை, லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். வாகா எல்லைக்கு மாலை 5.20 மணியளவில் அபிநந்தன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அபிநந்தனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய பொதுமக்கள் எல்லை பகுதியில் குவிந்திருந்தனர். மேளம், தாளம் முழங்க அவர்கள் நடனமாடி அபிநந்தனை வரவேற்க காத்திருந்தனர். அபிநந்தன் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். இந்திய கொடிகளை அசைத்து வாழ்க கோஷமிட்டனர்.
ஆனால், இந்திய மக்களின் ஹீரோவான அபிநந்தனை யார் முன்னிலையிலும் அழைத்துவரவில்லை. எனவே, அவரை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எங்கே அபிநந்தன், எங்கே என மக்கள் தேடினர்.
ஆனால் இரவு 9.20 மணிவரை வரை அபிநந்தன் முகத்தை எந்த மீடியாவாலும் காண்பிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதை இரு நாட்டு அரசுகளும் முறையாக அறிவிக்கவில்லை.

இந்தியாவிடம் ஒப்படைக்கும் கால நேரத்தில், 2 முறை பாகிஸ்தான் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்திய வீரரை ஒப்படைக்க இழுத்தடித்து பாகிஸ்தான் வேடிக்கை காட்டியதக வாகா எல்லையில் கொந்தளிப்பான சூழல் உருவானது.
இந்த நிலையில், இரவு 9.20 மணிக்கு வாகா எல்லை வழியாக அபிநந்தன் அழைத்து வரப்பட்டு இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டாார். அவரை பார்த்த பொதுமக்கள் வாழ்க.. வாழ்க.. என்று கோஷமிட்டனர். இதையடுத்து அபிநந்தன், அமிர்தசரசுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து, விமானத்தின் மூலம், டெல்லி பயணிக்க உள்ளார் வீர மகன் அபிநந்தன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications