நாட்டிலேயே முதல் இடம்.. அசைக்க முடியாத ரெக்கார்டு வைத்த கேரளா.. எதில் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் மொத்தம் 8.8 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதில் பெண்கள் மட்டும் 3.1 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர் என்றும் கேரளா மாநிலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாஸ்போர்ட்கள் வைத்துள்ளனர் என்று மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
வெளிநாடு பயணம் செய்ய பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். இது அந்த நபர் குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான சான்றாகும். இந்தியாவில் பலரும் அடையாள சான்றாக கூட பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்கள். இதனால்,வெளிநாடு செல்ல திட்டமில்லை என்றலும் கூட பாஸ்போர்ட் எடுக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்..

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் சுமார் 9 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தற்போது நம் நாட்டின் எந்த மாநிலத்தில் அதிக பாஸ்போர்ட்கள் வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. இதன்படி, நாட்டிலேயே அதிகமாக பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரள மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது.
கேரளா மாநிலம் முதலிடம்: பாஸ்போர்கள் தொடர்பான புள்ளி விவரத்தினை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி, இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட்கள் வைத்திருப்பவர்களின் மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. கேரளா மாநிலத்தில் சுமார் 99 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். கேரளாவில் மொத்த மக்கள் தொகை 4 கோடி.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமுமான (24 கோடி பேர்) உத்தர பிரதேசத்தில் 88 லட்சம் பேர் பாஸ்போர்ட்கள் வைத்துள்ளனர். இதேபோல் , 13 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 98 லட்சம் பேர் பாஸ்போர்ட்கள் வைத்து இருக்கின்றனர். இதேபோல் பஞ்சப் மாநிலத்தில் மொத்தம் 70 லட்சம் பேர் பாஸ்போர்ட்கள் வைத்திருக்கின்றனர்.
பெண்கள் லிஸ்டிலும் கேரளா: இதேபோல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பெண்கள், ஆண்கள் லிஸ்ட் படி எந்த மாநிலம் என்று பார்த்தால் இதிலும் கேரளா மாநிலமே முதன்மை வகிக்கிறது. கேரளாவில் மொத்தம் 99 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நிலையில், இதில் பெண்கள் மட்டுமே 42 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்று இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 40.8 லட்சம் பெண்கள் பாஸ்போர்ட்கள் வைத்திருக்கின்றனர்.
உத்தபிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்கு ஆண்களே அதிகளவில் பாஸ்போர்ட்கள் வைத்து இருக்கின்றனர். பெண்கள் 20 சதவீதத்தினர்ரே அதாவது 17 லட்சம் பேர பாஸ்போர்ட்கள் வைத்துள்ளனர். ஒட்டு மொத்தமாக நாட்டில் பெண்கள் 35 சதவீதம் பேர் பாஸ்போர்ட் வைத்து இருக்கின்றனர். அதாவது 3.1 கோடி பெண்கள் நாட்டில் பாஸ்போர்ட் வைத்து இருக்கின்றனர். ஆண்கள் பெண்கள் என மொத்தமாக நாட்டில் 8.8 கோடி பாஸ்போர்ட்கள் மக்கள் வைத்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications