இன்னும் 1,000 நாட்களில்.. அனைத்து கிராமங்களும் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் இணையும்- மோடி அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்னும் 1,000 நாட்களுக்குள் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கால் இணைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
Recommended Video
நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:
2014 க்கு முன்னர் நாட்டில் ஐந்து டஜன் பஞ்சாயத்துகள் மட்டுமே ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.

1000 நாட்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) ஆட்சிக்கு வந்ததிலிருந்து) 1.5 லட்சம் பஞ்சாயத்துகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த 1,000 நாட்களில் (சுமார் 3 ஆண்டுகள்) நாட்டின் ஒவ்வொரு கிராமமும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கால் இணைக்கப்படும்.

ஆக்கிரமிப்பு
பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டில் ஆக்கிரமிப்பை நாம் எதிர் கொண்டோம். நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது பாரம்பரியத்தையும் அழித்து ஒடுக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவர்கள், நமது தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் குறைத்து மதிப்பிட்டனர். இறுதியில் நாம் வெற்றி பெற்றோம், அவர்கள் தோல்வி அடைந்தனர்.

சீனாவுக்கு குட்டு
தற்போது தங்களது நாட்டு தேசியக் கொடியை பறக்க விடுவதற்கு புதிய இடங்களைத் தேடி வருவோர், தங்களது சாம்ராஜ்யத்தை விரிவாக்க விரும்புவோர் நம்மை குறைவாக மதிப்பிட்டு வருகின்றனர். இந்த உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. பல நாடுகள் பெரும் அழிவை சந்தித்தன. ஆனால், நாம் இதற்கு நடுவே வீறுகொண்டு எழுந்து வருகிறோம்.

புதிய உயரம்
நமது சுதந்திரப் போராட்டம் உலக நாடுகளுக்கு ஒரு ஒளி விளக்கு. இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வது பற்றி இப்போது நாம் யோசிக்க தொடங்கியுள்ளோம். சுய சார்பு இந்தியா என்பது நமது தாரக மந்திரம். இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications