வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. யார் இந்த மல்யுத்த சம்மேளன தலைவர்? பாஜக எம்பியாமே.. முழுபின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமர்த்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாஜக எம்பி என்பதும், 6வது முறையாக எம்பியாக உள்ளதும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்ப்பட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனம் மீது தற்போது பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டுகளை கூறியுள்ளனர்.

அதோடு லக்னோவில் உள்ள தேசிய முகாமில் பல பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 டெல்லியில் போராட்டம்

டெல்லியில் போராட்டம்

மேலும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த 2 நாட்களாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்ககனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அமித் தன்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

யார் இவர்?

யார் இவர்?

இதுதொடர்பாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் யார்? என்பது பற்றி பலரும் தேட தொடங்கி உள்ளனர். அவர் யார்? அரசில் பின்புலம் என்ன? என்பது பற்றிய முழுதவகல் வருமாறு:

பாஜக எம்பி

பாஜக எம்பி

பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பாஜக எம்பியாக உள்ளார். இவர் 6வது முறையாக எம்பியாகி உ்ளளார். இவர் உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக இருக்கிறார். இதற்கு முன்பு கோண்டா, பால்ராம்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக இருந்தவர். இவர் முதல் முதலாக 1991ல் எம்பியானார். அதன்பிறகு 1999, 2004, 2009, 2014, 2019 தேர்தல்களில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். இவர் 2009 தேர்தலில் மட்டும் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிற 5 தேர்தல்களிலும் பாஜகவில் களமிறங்கி வாகை சூடி எம்பியானார்.

 பாபர் மசூதி இடிப்பு விவகாரம்

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்

இவர் உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் வசித்து வருகிறார். இவர் இளம் வயதில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்தார். மாணவர் பருவத்தில் 1980ல் அரசியலில் நுழைந்தார். இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்ட இவர் அயோத்தியா ராம்மந்திர் மூமெண்ட்டில் பங்கேற்றார். பாபர் மசூதி வழக்கில் இவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி உள்பட 40 பேர் முக்கிய நபராக கருதப்பட்ட நிலையில் அதிலும் ஒருவராக இவர் இடம்பிடித்து இருந்தார். அதன்பிறகு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த பதவியில் அவர் நீடித்து வரும் நிலையில் தான் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+