உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 18 கோடியை நெருங்கியது; உயிரிழப்புகள் 38,88,332 ஆக அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 கோடியை நெருங்கியுள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,88,332 ஆகும்.

உலக நாடுகளில் கொரோனா 2-வது அலை ஓய்ந்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,95,33,408. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,88,332. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,41,59,575.

ஒருநாள் பாதிப்பில் முதலிடம்

ஒருநாள் பாதிப்பில் முதலிடம்

ஒருநாள் பாதிப்பில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் 24 மணிநேரத்தில் 899 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் சற்று குறைவு

இந்தியாவில் சற்று குறைவு

ஒருநாள் பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 39,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 846 பேர் ஒருநாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,70,998 ஆக குறைந்துள்ளது.

கேரளாவில் அதிகம்

கேரளாவில் அதிகம்

இந்தியாவில் திங்கள்கிழமையன்று கேரளாவில் 7,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இம்மாநிலத்தில் 94 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். கேரளாவில் 13,596 பேர் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

தமிழக பாதிப்பு

தமிழக பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் திங்கள்கிழமையன்று மட்டும் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் நேற்று 15,281 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர்.

மகாராஷ்டிரா மரணங்கள் அதிகம்

மகாராஷ்டிரா மரணங்கள் அதிகம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருக்கின்றன. மகாராஷ்டிராவில் 6,270 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 352 ஆக இருந்தது. மகாராஷ்டிராவில் 13,758 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+